அமெரிக்க அணியில் அரைசதம் விளாசிய இலங்கை வீரர்
16 வைகாசி 2026 சனி 13:46 | பார்வைகள் : 1007
நேபாள அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அமெரிக்க அணி 195 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
அமெரிக்கா மற்றும் நேபாள அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி கிர்திபூரில் நடந்து வருகிறது.
துடுப்பாட்டத்தை தொடங்கிய அமெரிக்க அணியில் ஷயன் ஜஹாங்கீர் 6 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் ஸ்மித் பட்டேல் மற்றும் இலங்கையைச் சேர்ந்த ஷெஹான் ஜெயசூரியா இருவரும் வலுவான கூட்டணி அமைத்தனர்.
நிதானமாக ஓட்டங்களை சேர்ந்த ஷெஹான் ஜெயசூரியா (Shehan Jayasuriya) 52 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 50 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார்.
அடுத்து அணித்தலைவர் சாய்தேஜா 4 ஓட்டங்களில் லாமிச்சேன் பந்துவீச்சில் போல்டு ஆனார். மிலிந்த் குமார் நின்று ஆட, 83 ஓட்டங்கள் குவித்த ஸ்மித் படேல் சோம்பல் கமி ஓவரில் வெளியேறினார்.
அதனைத் தொடர்ந்து விக்கெட்டுகள் சரிய, அமெரிக்க அணி 43.3 ஓவர்களில் 195 ஓட்டங்களுக்கு சுருண்டது.
மிலிந்த் குமார் 28 ஓட்டங்கள் எடுத்தார். மிரட்டலாக பந்துவீசிய திபேந்திர சிங் ஐரி 4 விக்கெட்டுகளும், சோம்பல் கமி 2 விக்கெட்டுகளும், சந்தீப் லாமிச்சேன் மற்றும் குல்சன் ஜா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan