Paristamil Navigation Paristamil advert login

Toulouse அருகே விஷப்பாம்பு எச்சரிக்கை!

Toulouse அருகே விஷப்பாம்பு எச்சரிக்கை!

16 வைகாசி 2026 சனி 09:40 | பார்வைகள் : 484


Toulouse அருகிலுள்ள Castelginest நகரத்தில், விஷமுள்ள cobra பாம்பு மீண்டும் காணப்பட்டதால், ஆயிரக்கணக்கான மக்கள் கடந்த வாரம் முதல் அவசர எச்சரிக்கை நிலையில் உள்ளனர்.

இந்த கொப்ரா முதலில் செவ்வாய்க்கிழமை  நகரின் தெருக்களில் காணப்பட்டது.
பின்னர் 14 மே வியாழக்கிழமை இரவு, அதே பாம்பு Hers ஆற்றங்கரையில் மீண்டும் காணப்பட்டதால்,

அருகிலுள்ள Saint‑Alban நகரமும் அவசர எச்சரிக்கை அறிவித்துள்ளது.

“பாம்பு எங்கிருந்து வந்தது தெரியவில்லை” — Castelginest நகராட்சி
“பாம்பு எங்கிருந்து வந்தது தெரியவில்லை.”
“குடியிருப்பாளர்கள் எடுத்த புகைப்படத்தின் அடிப்படையில்
SDIS நிபுணர்கள் அதை கோப்ரா (cobra) என உறுதி செய்தனர்.”

முதல் காணப்பட்டதிலிருந்து :

அதிகாரிகள் பாம்பை தேடி வருகின்றனர்

மக்கள் அதிக கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டனர்

பூங்காக்கள், மயானங்கள், பள்ளிகள்  
→ புதன்கிழமை முழுவதும் மூடப்பட்டன

Saint‑Alban நகரமும் எச்சரிக்கை — பாம்பு ஆற்றைக் கடந்திருக்கலாம்

Saint‑Alban நகர முதல்வர் Yoan Cabanne  
→ தனது நகர மக்களுக்கும் எச்சரிக்கை விடுத்தார்

காரணம் :


→கோப்ரா (cobra) Hers ஆற்றங்கரையில் மீண்டும் காணப்பட்டது
→ இந்த ஆறு இரண்டு நகரங்களையும் பிரிக்கிறது

“பாம்பு ஆற்றைக் கடந்திருக்க வாய்ப்பு உள்ளது.
அதனால் Saint‑Alban பக்கத்திலும் தேடுதல் தொடங்கப்படும்.”

“Hers ஆற்றங்கரைக்கு மக்கள் செல்லக் கூடாது.
நகராட்சி உத்தரவை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்.”


நகராட்சியின் அவசர எச்சரிக்கை : “அதிக கவனத்துடன் இருங்கள்”
Castelginest நகராட்சி சமூக வலைதளங்களில் ,

“நகரத்தில் விஷமுள்ள கோப்ரா இருப்பது உறுதி.
எனவே உங்கள் பயணங்களில் அதிக கவனத்துடன் இருங்கள்.”

“உயரமான புல்வெளிகளைத் தவிர்க்கவும்.
குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகளையும் பாதுகாக்கவும்.”

“பாம்பை பார்த்தால் அருகில் செல்ல வேண்டாம்.
தூரத்தில் இருந்து புகைப்படம் எடுத்து
உடனடியாக 18 அழைக்கவும்.
சிறப்பு பயிற்சி பெற்ற தீயணைப்பு குழுக்கள்
தற்போது செயல்பாட்டில் உள்ளனர்.”

→கோப்ராவை பார்த்தால் எப்படி நடக்க வேண்டும்? — நிபுணர்களின் ஆலோசனை
பயப்பட வேண்டாம் !

→கோப்ரா மனிதரை துரத்தாது

தன்னை ஆபத்தில் உணர்ந்தால் மட்டுமே தாக்கும்

OMS புள்ளிவிவரங்கள் :

உலகில் ஆண்டுக்கு 81,000 முதல் 138,000 பேர் பாம்பு கடியால் இறக்கின்றனர்

ஆனால் பாம்புகள் விஷத்தை வீணாக பயன்படுத்துவதில்லை

“பாம்பு கடிப்பது அதன் உடலுக்கு மிகுந்த சோர்வை ஏற்படுத்தும்.
அதனால் அது கடிப்பது இறுதி முயற்சி.”

“பல நேரங்களில் அது மூக்கால் தட்டுவது போன்ற
எச்சரிக்கை செயல்களை மட்டுமே செய்கிறது.”

பாம்பு அதிர்வுகளை உணரும் :

அருகில் நடக்கும் போத காலால் தரையைத் தட்டுவது  பாம்பை விலகச் செய்யும்


கடி ஏற்பட்டால் :

15 அல்லது 112 அழைக்கவும்

அமைதியாக படுத்திருக்கவும்

அசைவுகள் விஷம் பரவலை அதிகரிக்கும்

காயம் சுற்றியுள்ள கட்டுகள், நகைகள் அகற்றவும்

தண்ணீர் / சோப்பு / கிருமிநாசினி கொண்டு
காயத்தை சுத்தம் செய்யலாம்


Toulouse பகுதியில் பாம்பு சம்பவங்கள் புதிதல்ல

Toulouse அருகே கொப்ரா காணப்படுவது புதிதானாலும், பாம்பு சம்பவங்கள் முன்பும் நடந்துள்ளன :

2017 : Saint‑Michel பகுதியில்
→ ஒரு குடியிருப்பாளர் தனது கழிப்பறையில் 1.50 மீட்டர் பைதான் கண்டுபிடித்தார்

2026 ஜனவரி :
→ Villefranche‑de‑Lauragais நகரத்தில் ஒரு python royal உரிமையாளரிடமிருந்து தப்பி
இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.