Paristamil Navigation Paristamil advert login

“அரசியல் கருத்து சொல்ல விளையாட்டு வீரர்களுக்கும் உரிமை உள்ளது” – எம்பாப்பேவுக்கு பரிஸ் மேயர் ஆதரவு!!

“அரசியல் கருத்து சொல்ல விளையாட்டு வீரர்களுக்கும் உரிமை உள்ளது” – எம்பாப்பேவுக்கு பரிஸ் மேயர் ஆதரவு!!

16 வைகாசி 2026 சனி 07:30 | பார்வைகள் : 185


Kylian Mbappé நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, தீவிர வலதுசாரி கட்சியான Rassemblement National ஆட்சிக்கு வரக்கூடும் என்ற அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார். Vanity Fair இதழுக்கு வழங்கிய நேர்காணலில் பேசிய அவர், “அவர்கள் போன்றவர்கள் ஆட்சிக்கு வந்தால் என் நாட்டுக்கு என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை நான் அறிவேன். நாங்களும் குடிமக்கள்தான்; எங்களுடைய குரலையும் வெளிப்படுத்த உரிமை உண்டு” என்று தெரிவித்துள்ளார்.

இந்தக் கருத்து பிரெஞ்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக RN கட்சியின் தலைவரான Jordan Bardella, எம்பாப்பேவின் கருத்துக்கு பதிலடி அளித்துள்ளார். “கிலியன் எம்பாப்பே PSG அணியை விட்டு சென்ற பிறகு அந்த அணி சாம்பியன்ஸ் லீக்கை வென்றது; இன்னும் ஒருமுறையும் வெல்லக்கூடும்” என்று அவர் நகைச்சுவை கலந்த விமர்சனம் முன்வைத்தார்.

இதற்கிடையில், பரிஸ் மேயர் Emmanuel Grégoire எம்பாப்பேவுக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளார். சமூக வலைதளமான X-இல் வெளியிட்ட பதிவில், “விளையாட்டு வீரர்கள், கலைஞர்கள் மற்றும் பொதுப் பிரபலங்கள் அரசியல் கருத்துகளை வெளிப்படுத்துவதற்கு முழு உரிமையும் நியாயமும் கொண்டவர்கள். தீவிர வலதுசாரி அரசியலுக்கு எதிராக தெளிவாகக் குரல் கொடுத்த கிலியன் எம்பாப்பேவுக்கு என் ஆதரவு என்றும் இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பரிஸ் மேயராக பொறுப்பேற்ற பிறகு, Paris Saint-Germain அணியுடன் Parc des Princes மைதான விவகாரத்தில் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.