Paristamil Navigation Paristamil advert login

இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி அதிகரிப்பு: ரஷ்யா

இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி அதிகரிப்பு: ரஷ்யா

16 வைகாசி 2026 சனி 05:14 | பார்வைகள் : 1261


இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ராவ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:

ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றுமதி அதிகரிப்பு தொடர்பாக தகவல்கள் வெளியிடப்பட்டு உள்ளது. அதில் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி அதிகமாக உள்ளது என்பதை தெளிவாக காட்டுகிறது.  இந்தியா தரப்பில் விருப்பம் காரணமாக கச்சா எண்ணெய் அதிகரித்துள்ளது.

ரஷ்ய கச்சா எண்ணெய் நிறுவனங்களை வெளியேற்றும் வகையில், உலகின் எரிசக்தி வளங்களை ஏகோபோகமாக்க அமெரிக்கா முயற்சி செய்கிறது. ஒவ்வொரு எரிசக்தி வழிகளையும் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சி செய்கிறது.இவ்வாறு செர்ஜி லாவ்ராவ் கூறினார்.