Paristamil Navigation Paristamil advert login

பவழ மல்லி பாடல் வசூல் இத்தனை கோடியா?

பவழ மல்லி பாடல் வசூல் இத்தனை கோடியா?

15 வைகாசி 2026 வெள்ளி 16:12 | பார்வைகள் : 205


தமிழ் சினிமாவில் தற்போது பிசியான இசையமைப்பாளராக வலம் வருபவர் சாய் அபயங்கர். இவர் கைவசம் தற்போது அல்லு அர்ஜுன், சூர்யா, தனுஷ் என பல்வேறு டாப் ஹீரோக்களின் படங்கள் உள்ளன. குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி அடைந்திருக்கும் சாய், அனிருத்திடம் கூலி உள்பட சில படங்களில் பணியாற்றி இருக்கிறார். அனிருத் உடன் பணியாற்றி இருந்தாலும் சாய் அபயங்கரை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தது அவர் இசையமைத்த சுயாதீன இசை ஆல்பம் பாடல்கள் தான். அவரின் ஆல்பம் பாடல்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன.

முதலில் கட்சி சேரா என்கிற பாடல் வைரல் ஹிட் ஆனது. அதன்பின்னர் ஆசகூட என்கிற பாடல் மூலம் மீண்டும் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார். பின்னர் விழி வீக்குற, சித்திர புத்திர என தொடர்ந்து தன்னுடைய ஹிட் லிஸ்டை நிரப்பிக் கொண்டே சென்றுகொண்டிருந்த சாய் அபயங்கர், கடைசியாக வெளியிட்ட ஆல்பம் பாடல் தான் பவழ மல்லி. இப்பாடல் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. வெளியான ஒரே நாளில் வைரல் ஹிட் அடித்த இப்பாடல், இன்று வரை யூடியூப் டிரெண்டிங்கில் இடம்பிடித்து உள்ளது.

பவழ மல்லி பாடலை சாய் அபயங்கர் உடன் சேர்ந்து ஸ்ருதி ஹாசனும் பாடி இருந்தார். இந்த பாடல் வைரல் ஹிட் அடிக்க முக்கிய காரணம் அதன் ஹூக் ஸ்டெப் தான். பவழ மல்லி பாடலை ஒரு கல்யாண செட் அப்பில் படமாக்கி இருந்தனர். அப்பாடலில் சாய் அபயங்கர் உடன் சேர்ந்து நடிகை கயாடு லோகர் நடித்திருந்தார். இருவரும் சேர்ந்து போட்டி போட்டு ஆடும் ஹூக் ஸ்டெப் செம ஹிட் அடித்ததும், அதனை ஆடி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட தொடங்கினர். இதனால் திரும்பும் பக்கமெல்லாம் பவழ மல்லி தான் மணக்கிறது.

பவழ மல்லி பாடலை தேஜோ பரத்வாஜ் இயக்கி இருந்தார். அப்பாடலுக்கு நிகேஷ் பொம்மி ஒளிப்பதிவு செய்திருந்தார். நடன இயக்குநர் ஷெரீஃப் தான் அப்பாடலில் இடம்பெற்ற அழகான நடன அசைவுகளை கோரியோகிராஃப் செய்திருந்தார். பவழ மல்லி பாடல் யூடியூப்பில் வெளியாகி கிட்டத்தட்ட இரண்டரை மாதங்கள் ஆகிவிட்டன. இருந்தாலும் இன்று வரை டிரெண்டிங்கில் உள்ள அப்பாடலுக்கு யூடியூப்பில் தற்போது வரை 15 கோடியே 38 லட்சத்து 76 ஆயிரத்து 865 வியூஸ் கிடைத்துள்ளன.

பவழ மல்லி பாடல் யூடியூபில் கிடைத்துள்ள வியூஸ்படி கோடிக்கணக்கில் வசூல் ஈட்டி இருக்கிறது. 150 மில்லியனுக்கு மேல் வியூஸ் அள்ளி இருக்கும் அப்பாடல் கிட்டத்தட்ட 4 முதல் 6 கோடி வரை வசூல் செய்திருக்கக் கூடும் என கூறப்படுகிறது. தற்போதைய காலகட்டத்தில் படங்களே இந்த வசூலை எட்ட படாத பாடு படுகின்றன. ஆனால் சாய் அபயங்கர், ஒரே ஒரு பாடலை பிளாக்பஸ்டர் ஹிட்டாக்கி அதன் மூலம் கோடி கோடியாய் வசூல் வேட்டையாடி வருகிறார்.