Paristamil Navigation Paristamil advert login

2026 உலகக்கிண்ணத்தில் கோல்மழை பொழிந்த ஜேர்மனி! வரலாற்று சாதனை

2026 உலகக்கிண்ணத்தில் கோல்மழை பொழிந்த ஜேர்மனி! வரலாற்று சாதனை

15 ஆனி 2026 திங்கள் 15:49 | பார்வைகள் : 233


கியூராசா அணிக்கு எதிரான உலகக்கிண்ண கால்பந்து போட்டியில், ஜேர்மனி அணி அபார வெற்றி பெற்று சாதனை படைத்தது.

ஜேர்மனி மற்றும் கியூராசா அணிகளுக்கு இடையிலான ஃபிபா உலகக்கிண்ண கால்பந்து போட்டி Houston மைதானத்தில் நடந்தது.

ஆட்டத்தின் 6வது நிமிடத்திலேயே ஜேர்மனியின் ஃபெலிக்ஸ் மேச்சா கோல் அடித்து மிரட்டினார்.

அதற்கு பதிலடியாக கியூராசா அணி வீரர் லிவனோ கோமேனென்சியா 21வது நிமிடத்தில் கோல் அடித்தார்.

அதன் பின்னர் ஜேர்மனி அணி வீரர்கள் கோல் மழை பொழிந்தனர். நிகோ ஸ்க்லோட்டர்பெக் 38வது நிமிடத்திலும், கை ஹவேர்ட்ஸ் 45+5வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

இதன்மூலம் ஜேர்மனி அணி முதல் பாதியில் 3-1 என முன்னிலை வகித்தது. இரண்டாம் பாதியிலும் ஆதிக்கம் செலுத்திய ஜேர்மனி ,மேலும் 4 கோல்கள் அடிக்க 7-1 என்ற கணக்கில் கியூராசாவை வீழ்த்தியது.

ஜமல் மியூசியாலா (47வது நிமிடம்), நதனியல் பிரவுன் (68வது நிமிடம்), டெனிஸ் உன்டவ் (78வது நிமிடம்), ஹவேர்ட்ஸ் (Havertz) 88வது நிமிடத்தில் கோல் அடித்தனர்.

ஜேர்மனி 7 கோல்கள் அடித்ததன் மூலம் உலகக்கிண்ணத் தொடரில் அந்த அணியின் கோல் எண்ணிக்கை 239 ஆக உயர்ந்தது. இதன்மூலம் பிரேசில் அணியின் (238 கோல்கள்) சாதனையை ஜேர்மனி முறியடித்தது.