Paristamil Navigation Paristamil advert login

திடீரென பெயரை மாற்றிய நடிகை ராஷ்மிகா மந்தனா...!

திடீரென பெயரை மாற்றிய நடிகை ராஷ்மிகா மந்தனா...!

15 ஆனி 2026 திங்கள் 12:39 | பார்வைகள் : 235


சினிமா உலகின் ஹாட் டாபிக் ஜோடியான விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா, சோஷியல் மீடியாவில் மீண்டும் சென்சேஷன் ஆகியுள்ளனர். சமீபத்தில் ராஜஸ்தானில் உள்ள ஒரு சொகுசு ஹோட்டலில் திருமணம் செய்துகொண்ட இந்த ஜோடி, தெலங்கானாவில் உள்ள தும்மன்பேட்டை கிராமத்திற்குச் சென்ற ஒரு நிகழ்ச்சிதான் இப்போது வைரல் ஆகியுள்ளது. விஜய் தேவரகொண்டாவின் சொந்த ஊரான தும்மன்பேட்டைக்கு திருமணத்திற்குப் பிறகு இந்த ஜோடி சென்றது. கிராமத்திற்கு வந்த புதுமணத் தம்பதியை ஊர் மக்கள் பூக்களை தூவி பிரம்மாண்டமாக வரவேற்றனர். அங்கு நடந்த சத்யநாராயண சுவாமி விரதம் மற்றும் கிரகப்பிரவேசம் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, ராஷ்மிகாவும் விஜய்யும் ஆசீர்வாதம் பெற்றனர்.

தும்மன்பேட்டையில் வெறும் பூஜை மட்டுமல்லாமல், ஒரு நல்ல சமூகப் பணியையும் இந்த ஜோடி செய்தது. விஜய் தேவரகொண்டா தனது சொந்த ஊர் அரசுப் பள்ளியில் படிக்கும் திறமையான மாணவர்களைப் பாராட்டும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். 9 மற்றும் 10 ஆம் வகுப்பு படிக்கும் மொத்தம் 180 மாணவர்களுக்கு கல்வி உதவியும் பரிசுகளும் வழங்கப்பட்டன. அப்போது பேசிய விஜய் தேவரகொண்டா, "கல்வி வாழ்க்கையை மாற்றும் சக்தி கொண்டது. கிராமப்புற மாணவர்கள் தாழ்வு மனப்பான்மையை விட்டுவிட்டு பெரிய கனவுகளைக் காண வேண்டும்" என்று ஊக்கமளித்தார். ராஷ்மிகாவும் மாணவர்களுடன் பேசி, அவர்களின் எதிர்கால லட்சியங்கள் குறித்து அறிவுரை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியின் ஹைலைட்டே ராஷ்மிகா மந்தனாவின் பேச்சுதான். மேடையில் மைக்கைப் பிடித்து பேச ஆரம்பித்த ராஷ்மிகா, தன்னை "ராஷ்மிகா மந்தனா தேவரகொண்டா" என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். 'நேஷனல் க்ரஷ்' இப்படிச் சொன்னதும், அங்கிருந்த ரசிகர்கள் ஆரவாரத்தில் அதிர்ந்தனர். ராஷ்மிகா தனது பெயரை மாற்றியதைக் கேட்டதும், மேடையில் இருந்த விஜய்யின் அம்மா (ராஷ்மிகாவின் மாமியார்) மற்றும் குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். ராஷ்மிகா தனது பெயருடன் 'தேவரகொண்டா' குடும்பப் பெயரைச் சேர்த்தது, அவர்கள் மீதான அன்புக்கும் மரியாதைக்கும் சாட்சியாக அமைந்தது. இந்த வீடியோ இப்போது இணையத்தில் செம வைரல்.

ராஷ்மிகா மந்தனா தற்போது பல பான்-இந்தியா படங்களில் பிஸியாக இருக்கிறார். விஜய் தேவரகொண்டாவும் பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஜோடியாக நடித்துள்ள ரணபலி திரைப்படமும் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த பிஸியான நேரத்திலும், தங்கள் சொந்த ஊர் வளர்ச்சிக்கும், மாணவர்களின் கல்விக்கும் நேரம் ஒதுக்கிய இந்த 'ரியல் ஹீரோ'க்களை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர்களுக்கு பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளன.