ஈரானின் வங்கிகள் மீது இணையத் தாக்குதல்
15 ஆனி 2026 திங்கள் 10:04 | பார்வைகள் : 316
ஈரானின் நான்கு பிரதான வர்த்தக வங்கிகளின் கட்டமைப்பைக் குறிவைத்து இணையத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஈரானிய ஏற்றுமதி மேம்பாட்டு வங்கி ,Bank Melli, Bank Tejarat, Bank Saderat ஆகிய வங்கிகள் இலக்கு வைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, சில வங்கிச் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்ததாக ரொய்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
இந்த இணையத் தாக்குதலினால் வாடிக்கையாளர்களின் எந்தவொரு தரவுகளுக்கும் அல்லது கணக்கு விபரங்களுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என அந்த நாட்டின் வங்கி ஒருங்கிணைப்பு பேரவை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
குறித்த நான்கு வங்கிகளும் பொதுவாகப் பயன்படுத்தும் மத்திய தகவல் தொடர்பு உட்கட்டமைப்பை இலக்கு வைத்தே இந்தத் இணையத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த இணையத் தாக்குதலை அடுத்து, ஈரானிய வங்கிக் கட்டமைப்பின் தொழில்நுட்ப வல்லுநர் குழுக்கள் உடனடியாகச் செயற்பட்டு தரவுப் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கான பாதுகாப்பு நடைமுறைகளை முன்னெடுத்துள்ளதாகவும் ரொய்டர்ஸ் தெரிவித்துள்ளது .






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan