ஆள் பிடிக்கும் நிலையில் தவெக இல்லை; செங்கோட்டையன்
15 ஆனி 2026 திங்கள் 10:29 | பார்வைகள் : 317
ஆள் பிடிக்கும் நிலையில் தவெக இல்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.
அவரது பேட்டி;
வேறு கட்சியில் இருந்த ஒரே ஒருவர் கட்சியில் இணைந்ததை அக்கட்சியின் பெரிய சாதனை போல் திமுகவினர் செய்துள்ளனர். ஆனால் ஆள் பிடிப்பது போன்று யாரையும் பிடிக்கும் நிலையில் தவெக இல்லை.
தவெக தலைவரை நாடி மக்கள் வருகின்றனர். பல்வேறு இயக்கங்களில் இருந்து வருவதே என்றைக்கும் நிகழ்கிற ஒன்று. திமுக ஆட்சியின் போது அன்று எம்எல்ஏவாக இருந்த கம்பம் ராமகிருஷ்ணன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் போய் சேரவில்லையா?
இவர்கள் ராஜினாமா செய்துவிட்டு கட்சியில் சேர்ந்த பின்னர் தேர்தலில் போட்டியிடவில்லையா? இதற்கு பெயர் என்ன? தேர்தல் முடிவு முழுவதும் வருவதற்கு முன்னே பெரும்பான்மை பலம் எங்களிடம் இருக்கும் போது, திமுகவும், அதிமுக கூட்டணி வைத்து ஆட்சியை பிடிக்கலாம் என்று நினைததவர்கள் யார்? அதற்கு அவர்கள் பதில் சொல்லட்டும்.
அதிமுக, திமுக இணைந்து ஆட்சியை பிடிப்பது என்ற சதிவலையை பின்னியது தமிழகத்தில் இது தான் முதல்முறை. டில்லியில் பிரதமரிடம் முதல்வர் பேசியது என்ன என்பது திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எப்படி தெரியும்?
சோலார் மின் உற்பத்தி தயாரிப்புக்காக கர்நாடகா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்கள் ஒரு மெகாவாட்டுக்கு ரு.1 கோடி மானியம் பெறும் போது தமிழகத்தில் அதை பெற முடியவில்லையே? அதற்கு என்ன காரணம் என்பதை திமுக தலைவர் ஸ்டாலின் சொல்லட்டும்.
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan