சர்வதேச பிரச்னைகளுக்கு தீர்வு காணும் நாடாக மாறிய இந்தியா; பிரதமர் மோடி
15 ஆனி 2026 திங்கள் 09:28 | பார்வைகள் : 202
உலக அரங்கில் இந்தியா வெறும் நுகர்வோராக இல்லாமல், தீர்வுகளை தீர்க்கும் நாடாக உருவெடுத்துள்ளதாக பிரான்ஸில் பாரத் இன்னோவேட்ஸ்' துவக்க நிகழ்வில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அவர் பேசியதாவது; வர்த்தக உறவு மற்றும் ராஜதந்திர கூட்டாண்மையை கடந்து, இந்தியா - பிரான்ஸ் இடையே குறிப்பிடத்தக்க உறவு இருக்கிறது. மனிதர்களுக்கான தொழில்நுட்பம் மற்றும் மனிதனை மையமாகக் கொண்ட புதிய கண்டுபிடிப்புகளுக்கே இந்தியா முன்னுரிமை அளிக்கிறது.
இந்தியாவின் இளம் கண்டுபிடிப்பாளர்கள் ஒட்டுமொத்த மனிதர்களுக்கும் பயனளிக்கும் தீர்வுகளைக் கண்டறிந்து வருகிறார்கள். இருநாடுகளுக்கு இடையே அசைக்க முடியாத நம்பிக்கை, புதிய கண்டுபிடிப்பு, பகிரப்பட்ட தொலைநோக்குப் பார்வை ஆகியவை உள்ளன. சர்வதேச அளவில் நிலவும் சவால்களுக்குத் தீர்வு காண்பதற்கும் நாம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளோம். மனிதர்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தீர்வு காண்பதில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டுள்ளன.
உலக அரங்கில் இந்தியா வெறும் நுகர்வோராக இல்லாமல், தீர்வுகளை உருவாக்கும் நாடாக உருவெடுத்துள்ளது. இன்று 21ம் நூற்றாண்டில் இந்தியா ஒரு மிகப்பெரிய மாற்றத்தைக் கண்டு வருகிறது. ஒரு ஸ்டார்ட்அப் புரட்சி நடந்து கொண்டிருக்கிறது.
இங்கு பெருமளவில் கூடியிருக்கும் இளம் தொழில்முனைவோர் இந்தியாவின் எதிர்காலத்தையும், அதன் இளைஞர்களின் நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan