ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை குறிவைத்த உக்ரைன் ட்ரோன்கள் தாக்குதல்
14 ஆனி 2026 ஞாயிறு 11:23 | பார்வைகள் : 306
ரஷ்யாவை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதலை நடத்தி இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் ஓரியோல், துலா மற்றும் ஸ்மோலென்ஸ்க் ஆகிய பகுதிகளை குறிவைத்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உக்ரைன் ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து மாஸ்கோவிற்கு தென்கிழக்கு பிராந்தியமான தம்போவ் பகுதியிலும் வான் தாக்குதலுக்கான சைரன்கள் ஒலிக்கப்பட்டன.
இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்பட்டுள்ளதா மற்றும் பிற சேதங்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
சமீபத்திய காலங்களில் ரஷ்ய நிலப்பரப்பிற்குள் உக்ரைனின் ஆளில்லா வான்வழி விமானங்கள் நுழைந்து தாக்குதல் நடத்துவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த தாக்குதலில் குறிப்பாக ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்பு வசதிகள் குறிவைக்கப்பட்டு வருகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan