Paristamil Navigation Paristamil advert login

இண்டி கூட்டணி மூலம் பாஜவுக்கு உதவும் ராகுல்; பினராயி விஜயன்

இண்டி கூட்டணி மூலம் பாஜவுக்கு உதவும் ராகுல்; பினராயி விஜயன்

14 ஆனி 2026 ஞாயிறு 12:40 | பார்வைகள் : 240


ராகுலின் அணுகுமுறை இண்டி கூட்டணியை வலுப்படுத்தாது. அது பஜவுக்கு மறைமுகமாக உதவி செய்வதாகவே இருக்கிறது என்று கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டி உள்ளார்.

பார்லி.யில் இண்டி கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூ. காங்கிரஸ் கட்சிகள் இருந்தாலும், கேரள மாநில அரசில் இவ்விரு கட்சிகளும் எதிரும், புதிருமாக செயல்பட்டு வருகின்றன.

இந்த கருத்து மோதல்களின் நீட்சியாக, இண்டி கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பினராயி விஜயனை கட்டிப்பிடிக்க மாட்டேன் என்று ராகுல் கூறியதாக செய்திகள் வெளியாகின.

இதுகுறித்து பினராயி விஜயன் கூறி உள்ளதாவது;

இங்கு யார், யாரை கட்டிப்பிடிக்கிறார்கள் என்பது பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை. ஆனால் பிரதமர் மோடியை ராகுல் கட்டிப்பிடித்த போட்டோக்களை அனைவரும் பார்த்தோம். பிரதமரை கட்டிப்பிடித்ததற்கு நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

மாறாக, ராகுல் கருத்துகள் ஒரு குறிப்பிட்ட செய்தியை சொல்கின்றன. அதாவது, ராகுல் எவ்வாறு இண்டி கூட்டணியை பார்க்கிறார், எவ்வாறு அணுகுகிறார் என்பதை காட்டுகிறது. எனவே இதை பற்றி விரிவாக பேச ஒன்றும் இல்லை.

இண்டி கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் நான் மட்டுமல்ல, அகிலேஷ், தேஜஸ்வி, காங்கிரஸ் அல்லாத மற்ற கட்சி தலைவர்கள் காங்கிரசின் செயல்பாடுகளை கண்டித்து, அக்கட்சிக்கு எதிராக பேசி உள்ளனர்.

தற்போது காங்கிரசின் அணுகுமுறையை உருவாக்கியது ராகுல். இந்த அணுகுமுறையானது இண்டி கூட்டணியை வலுப்படுத்தாது. இது பாஜவுக்கு உதவும் வகையிலே உள்ளது. பாஜ நலன்களுக்கு உதவும் வகையில் ராகுல் திறம்பட செயல்படுகிறார்.

இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.