Paristamil Navigation Paristamil advert login

பிரான்சில் பிரதமர் மோடி - அதிபர் டிரம்ப் சந்திப்பு!

பிரான்சில் பிரதமர் மோடி - அதிபர் டிரம்ப் சந்திப்பு!

14 ஆனி 2026 ஞாயிறு 07:21 | பார்வைகள் : 305


பிரான்சில் பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டிரம்பும் சந்தித்து பேச இருப்பதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளுக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி, பிரான்ஸ் மற்றும் ஸ்லோவேகியா நாடுகளுக்கு செல்கிறார். 19ம் தேதி வரையிலான இந்தப் பயணத்தின் போது, 52வது ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க இருக்கிறார். இந்த மாநாட்டின் போது, பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் சந்தித்து பேச இருக்கிறார்.

இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் கலந்து கொள்ள இருக்கிறார். அப்போது, ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் பதித்து வைத்துள்ள கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான திட்டங்கள் குறித்து தனது நட்பு நாடுகளுடன் அவர் ஆலோசனை நடத்த இருப்பதாக அமெரிக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், பிரான்சில் பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டிரம்பும் சந்தித்து பேச இருப்பதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இந்த சந்திப்பின் போது, இருநாடுகளிடையேயான வர்த்தக உறவு குறித்தும், போர் நிறுத்தத்தின் நிலை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.