Paristamil Navigation Paristamil advert login

சங்கீதன் விடுதலை - மகிழ்ச்சி வெளியிட்ட நாமல்

சங்கீதன் விடுதலை - மகிழ்ச்சி வெளியிட்ட நாமல்

13 ஆனி 2026 சனி 13:15 | பார்வைகள் : 200


பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 24 வயதுடைய சொல்லிசைக் கலைஞர் சங்கீதன் கணேஷ்குமார் விடுவிக்கப்பட்டமையை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வரவேற்றுள்ளார்.

இது குறித்துத் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள நாமல் ராஜபக்ஷ, இக்கலைஞரின் விடுதலைக்கு பின்னால் உள்ள அரசியல் குறித்துத் தான் எந்தவொரு கருத்தையும் கூற விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

"இந்த முடிவுக்குப் பின்னால் உள்ள அரசியல் குறித்து நான் கருத்து தெரிவிக்கப் போவதில்லை. இங்கு மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இளம் கலைஞர் சங்கீதன் விடுதலை செய்யப்பட்டு, அவரது குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்துள்ளார். அது நடந்ததைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்" என நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அந்த இளம் கலைஞர் தனது திறமைகளையும் எதிர்கால இலட்சியங்களையும் நேர்மறையான மற்றும் அர்த்தமுள்ள வழியில் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என வாழ்த்துவதாகவும் அவர் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.