Paristamil Navigation Paristamil advert login

தாய்​லாந்​தின் எரா​வான் ஆலய குண்டு வைப்பு - இருவருக்கு மரண தண்டனை

தாய்​லாந்​தின்  எரா​வான் ஆலய குண்டு வைப்பு - இருவருக்கு மரண தண்டனை

13 ஆனி 2026 சனி 08:53 | பார்வைகள் : 196


தாய்​லாந்​தின் பாங்காக் நகரில் சீனா​விலிருந்து சுற்றுலா வரு​வோர் மத்​தி​யில் மிக​வும் பிரபல​மான எரா​வான் வழி​பாட்​டுத் தலத்திற்கு குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் இருவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நான்கு தலைகளைக் கொண்ட பிரம்மா, பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் தெய்வமாக வழிபடப்படுகிறார்.  

எரவான் என்பது இந்திரனின் வாகனமான மூன்று தலை வெள்ளை யானையைக் குறிக்கும்.

பிரம்மனின் உருவமும் இந்த யானையும் இணைந்து தாய்லாந்து கலாச்சாரத்தில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன.

இங்கு கடந்த 2015 ஆகஸ்ட் 17-ம் தேதி சக்தி​ வாய்ந்த குண்டு வெடித்​த​தில் 20 பேர் உயி​ரிழந்​தனர்.

120-க்கும் மேற்​பட்​டோர் காயம் அடைந்​தனர். இந்த குண்​டு​வெடிப்​பு நடந்த சிறிது நேரத்​தில் சீனா​வின் உய்​குர் முஸ்​லிம் சமூகத்தை சேர்ந்த யுசுபு மியரைலி, பிலால் முகமது ஆகிய இரு​வர் கைது செய்​யப்​பட்​டனர்.

வீடியோ பதிவு​கள், கைரேகைகள் மற்​றும் பிற ஆதா​ரங்​களின் அடிப்​படை​யில் இவர்கள் இந்த குண்​டு​ வெடிப்​புடன் தொடர்​புடைய​வர்​கள் என்று குற்​றம் சாட்​டப்​பட்​டது. இந்​நிலை​யில் இந்த வழக்​கில் தெற்கு பாங்​காக் குற்​ற​வியல் நீதி​மன்​றம் இரு​வருக்​கும் நேற்று மரண தண்​டனை விதித்​தது.

இவர்களுக்கு எதி​ராக வலு​வான ஆதா​ரங்​கள் இருப்​ப​தாக​வும் தாங்​கள் குற்​ற மற்​றவர்​கள் என்​பதை நிரூபிக்க அவர்​களால் போது​மான ஆதா​ரங்​களை வழங்க முடிய​வில்லை என்​றும் நீதி​மன்​றம் தெரிவித்​துள்​ளது. இந்​தக் குண்​டு​வெடிப்பு தொடர்​பாக அதி​காரி​கள் 17 சந்​தேக நபர்களை அடை​யாளம் கண்​டனர்.

ஆனால் 3 பேர் மட்​டுமே கைது செய்​யப்​பட்​டனர். ஆதா​ரங்​கள் இல்​லாத​தால், தாய்​லாந்து பெண் ஒரு​வர் மீதான குற்​றச்​சாட்​டு​கள் 2024-ல் கைவிடப்​பட்​டன என்பது குறிப்பிடத்தக்கது.