காங்கிரசை பலவீனப்படுத்த பாஜ முயற்சி: மல்லிகார்ஜூன கார்கே
13 ஆனி 2026 சனி 12:37 | பார்வைகள் : 139
ராஜ்யசபா வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்பு மனு நிராகரிப்பு சட்ட விரோதமானது, காங்கிரசை பலவீனப்படுத்த நடக்கும் முயற்சி என்று அக்கட்சியின் தலைவர் மலலிகார்ஜூன கார்கே குற்றம்சாட்டி உள்ளார்.
மத்திய பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபா தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இது குறித்து பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரசை பலவீனப்படுத்தும் பாஜ முயற்சிகளில் இதுவும் ஒன்று என்றார். அவர் மேலும் கூறியதாவது;
தேர்தல் கமிஷன், பின்னர் உயர்நீதிமன்றம் ஆகியவற்றை அணுகி அதன் பிறகு உச்ச நீதிமன்றம் நாட வேண்டும் என்பதே அவர்களின் வாதமாக இருந்திருக்கிறது. கால தாமதம் ஏற்படும் போது இது போன்ற வழக்குகள் மேலும் இழுத்தடிக்கப்படும்.
எனவே தான் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் நிவாரணம் தர வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். ஆனாலும் நீதிமன்றம் சொன்னபடி நாங்கள் உயர் நீதிமன்றத்தை நாடுவோம்.
இந்த வேட்பு மனு நிராகரிப்பு என்பது சட்ட விரோதமானது. அறநெறிக்கு முரணானது என்பது மட்டுமல்ல ஜனநாயகத்துக்கும் விரோதமானது. அரசின் செயல் தவறானது.
பிரதமரின் ஒப்புதல் அல்லது அவரது வழிகாட்டுதல் இல்லாமல் இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்க முடியாது. காங்கிரசை பலவீனப்படுத்தவும், ஜனநாயகத்தை சீர்குலைக்கவும் எடுக்கப்படும் ஒரு சதியின் பகுதியாகவே நாங்கள் இதை கருதுகிறோம்.
எதிர்க்கட்சிகளை துன்புறுத்தி ஒடுக்குவதையே நோக்கமான கொண்டுள்ளன என்பதையே இந்த செயல்கள் காட்டுகின்றன.
இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே பேட்டியின் போது கூறினார்






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan