ராகவா லாரன்ஸ் திருச்சி கிழக்கில் தவெக சார்பில் போட்டியா?
12 ஆனி 2026 வெள்ளி 16:10 | பார்வைகள் : 300
ராகவா லாரன்ஸ் வெளியிட்ட வீடியோவில், “கடமையை செய், பலனை எதிர்பார்க்காதே. இந்த வாசகம் எனக்கு மிகவும் பிடிக்கும். வேலை செய்கிறோம், அதற்கான பலனை எதிர்பார்க்க கூடாதா..? என்ற கேள்வி இருக்கும். குட்டி கதை சொல்கிறேன். ஒரு பெரிய வீடு. பணக்காரர். அவர் அறையை சுத்தம் செய்ய 2 பேர் இருந்தார்கள். அதில் ஒருவர் எப்போதும் அவர் வேலையை பார்ப்பார்.
மற்றொருவர், பணக்கார முதலாளியிடம், ‘சார் நீங்க சூப்பரா இருக்கீங்க’ என சொல்வார். இப்படியே தினமும் நடக்கும். ஒருநாள் ஓனர் வெளியூருக்கு சென்றார். அப்போது 2 வேலைக்காரரை அழைத்து, ‘சூப்பர்’ என பாராட்டிய வேலைக்காரருக்கு சம்பள உயர்வு கொடுத்தார். எப்போதும் வேலை செய்யும் மற்றொரு வேலைக்காரரை அழைத்து வீடு கொடுத்தார். என்னுடன் வெளியூருக்கு வந்துவிடு என்றாராம்.
அப்போது மற்றொரு வேலைக்காரர், ‘சார் நான் தான் உங்களை தினமும் பாராட்டினேன்’ என்றதற்கு, ‘நான் கொடுத்த வேலையை நீ செய்யவில்லை. ஜால்ரா அடித்தாய்’ என முதலாளி கூறினாராம். வேலை செய்தால் கடவுள் பலன் கொடுப்பார். திருச்சி கிழக்கில் நான் நிற்க வேண்டுமென்றால் நான் அரசியலுக்கு வர வேண்டும்.
நான் சமூக சேவைகளை செய்து வருகிறேன். கஷ்டப்படுபவர்களுக்கு உதவி செய்து வந்தேன். அப்போது தான் ஜல்லிக்கட்டு போராட்டம் வந்தது. அங்கு சென்று சாப்பாடு கொடுத்தேன். அது தான் அரசியல் துவக்கமாக அமைந்தது. ரஜினி குறித்து சீமான் நிறைய விமர்சனங்களை முன்வைத்தார். நான் ரஜினியிடம், ‘அண்ணே அவர் ஓவரா பேசுறார்’ என கூறினேன். ரஜினி அமைதியாக இருக்க சொன்னார்.
ரஜினி அரசியல் என்ட்ரி குறித்து அறிவித்தார். நானும் அரசியலுக்கு வருவதாக ரஜினியிடம் கூறினேன். அரசியலில் வென்றால் பெரிய அளவில் ட்ரஸ்ட் கட்டுவோம் என தம்பிகள் கூறினார்கள். என்னுடைய அரசியல் என்ட்ரி குறித்து அம்மாவிடம் சொன்னேன். அவர் முகம் சட்டென மாறிவிட்டது. நான் சொன்னதும், அம்மா எழுந்து சென்றுவிட்டார். 2, 3 நாட்கள் என்னிடம் பேச மறுத்தார். நான் அரசியலுக்கு வருவதை அம்மா விரும்பவில்லை.
‘அரசியல் சாக்கடை’ என்றார் என்னுடைய அம்மா. ரஜினியை பார்த்து இதை சொல்ல போகிறேன் என்றார். அந்த நேரத்தில் கொரோனா வருகிறது. எல்லாமே முடங்கிவிட்டது. அப்போது, ‘அரசியலுக்கு வரவில்லை’ என ரஜினி அறிவித்தார். அவ்வளவு தான் தலைமேல் கை வைத்து உட்கார்ந்துவிட்டோம். நான் போய் பேசும்போது, ‘மக்களுக்கு நல்லது செய்ய முடியவில்லை’ என ரஜினி வருதப்பட்டார்.
அதன் பிறகு விஜய் அரசியலுக்கு வரேன் என்றார். உடனே ட்ரஸ்ட் சென்று, ‘நண்பர் வருகிறார்’ என கூறி அதற்கான வேலைகளை ஆரம்பித்தேன். விஜய் கடின உழைப்பாளி. அம்மாவிடம் கேட்டேன். அம்மா வேணாம் என்று விஜயிடம் கூறினார். அதன் பிறகு தேர்தல் முடிவுகள் வெளியாகி மாற்றத்தை ஏற்படுத்தியது. உடனே என் அம்மா, ‘விஜய் மாற்றிவிட்டார்’ என கூறினார். அப்போது என்னை அரசியலுக்குள் நுழைய அனுமதி கொடுத்தார். அம்மா ஓகே சொல்லிவிட்டார். தாய்க்கு நிகராக என் ரசிகர்களை நினைக்கிறேன். நான் அரசியலுக்கு வரலாமா? அந்த தகுதி எனக்கு இருக்கா? என்பது குறித்து நீங்கள் கமெண்ட்ஸில் சொல்லுங்கள்” என தெரிவித்துள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan