Paristamil Navigation Paristamil advert login

உலகின் அமைதியான நாடுகளின் பட்டியல் - 67வது இடத்தில் இலங்கை

உலகின் அமைதியான நாடுகளின் பட்டியல் - 67வது இடத்தில் இலங்கை

12 ஆனி 2026 வெள்ளி 14:20 | பார்வைகள் : 369


Institute for Economics & Peace என்ற நிறுவனம், ஒவ்வொரு ஆண்டும் உலகளாவிய அமைதி குறியீட்டை (Global Peace Index) வெளியிட்டு வருகிறது.

தற்போது, 2026 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய அமைதி குறியீட்டை வெளியிட்டுள்ளது.

அண்டை நாடுகளுடனான உறவு, வெளிப்புற மோதல்கள், உள்நாட்டு மோதல்கள், அரசியல் நிலைத்தன்மை, பயங்கரவாதம், ராணுவத்திற்கான நிதி ஒதுக்கீடு,போதை பொருள் பயன்பாடு உள்ளிட்ட 23 குறியீடுகளை அடிப்படையாக வைத்து 163 நாடுகளுக்குத் தரவரிசை வழங்குகிறது.

இதில், கடந்த 2008 ஆம் ஆண்டு முதல், தொடர்ச்சியாக 18 ஆண்டுகளாக ஐஸ்லாந்து 1.161 புள்ளிகளுடன் இந்தக் குறியீட்டில் முதலிடம் வகித்து வருகிறது.

கடந்த ஆண்டு 3 ஆம் இடத்திலிருந்த நியூசிலாந்து, ஒரு இடம் முன்னேறி 1.343 புள்ளிகளுடன் 2வது இடத்தை பிடித்துள்ளது.

2 ஆம் இடத்திலிருந்த சுவிட்சர்லாந்து ஒரு இடம் பின்தங்கி 1.363 புள்ளிகளுடன் 3வது இடத்தை பிடித்துள்ளது.

ஸ்லோவேனியா 4வது இடத்திலும், அயர்லாந்து 5வது இடத்திலும், ஆஸ்திரியா 6வது இடத்திலும், போர்ச்சுகல் 7வது இடத்திலும், சிங்கப்பூர் 8வது இடத்திலும், பின்லாந்து 9வது இடத்திலும், ஜப்பான் 10வது இடத்திலும் உள்ளது.

கனடா ஒரு இடம் முன்னேறி 14வது இடத்திலும், அவுஸ்திரேலியா 4 இடங்கள் முன்னேறி 20வது இடத்திலும், ஜேர்மனி 5 இடங்கள் பின்தங்கி 28வது இடத்திலும், பிரித்தானியா 7 இடங்கள் பின்தங்கி 39வது இடத்திலும், பிரான்ஸ் 3 இடங்கள் முன்னேறி 99வது இடத்திலும், அமெரிக்கா 4 இடங்கள் பின்தங்கி 134வது இடத்திலும் உள்ளது.

இலங்கை 14 இடங்கள் முன்னேறி 1.91 புள்ளிகளுடன் 67வது இடத்தில் உள்ளது. இதன் மூலம் தெற்காசியாவில் 2வது இடத்தைப் பெற்றுள்ளது.

இந்தியா 3 இடங்கள் பின்தங்கி 2.406 புள்ளிகளுடன் 127வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 6 இடங்கள் பின்தங்கி 152வது இடத்தில் உள்ளது.

போர் சூழலில் உள்ள மத்திய கிழக்கு நாடுகளில், கத்தார் 10 இடங்கள் பின்தங்கி 31வது இடத்திலும், குவைத் 13 இடங்கள் பின்தங்கி 49வது இடத்திலும், ஓமன் 26 இடங்கள் பின்தங்கி 60வது இடத்திலும், ஐக்கிய அரபு அமீரகம் அதே 73வது இடத்திலும், சவுதி அரேபியா 2 இடங்கள் பின்தங்கி 95வது இடத்திலும், பஹ்ரைன் அதே 108 வது இடத்திலும், ஈராக் அதே 140வது இடத்திலும், ஈரான் 6 இடங்கள் பின்தங்கி 144வது இடத்திலும் உள்ளன.

இதே போல்,இஸ்ரேல் ஒரு இடம் முன்னேறி 159வது இடத்திலும், உக்ரைன் 2 இடங்கள் முன்னேறி 160வது இடத்திலும், ரஷ்யா கடந்த ஆண்டை போல் கடைசி இடமான 163வது இடத்தில் உள்ளது.