உங்களுக்கே தெரியாமல் screenshot எடுக்கும் PC - இதனை கட்டுப்படுத்துவது எப்படி?
12 ஆனி 2026 வெள்ளி 16:11 | பார்வைகள் : 208
Microsoft நிறுவனம் Windows 11 Copilot+ PC-களில் அறிமுகப்படுத்தியுள்ள Recall என்ற புதிய AI அம்சம், உலகளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த Recall அம்சம், உங்கள் கணினி மற்றும் ஸ்மார்ட்போனில் நீங்கள் திறக்கும் ஒவ்வொரு Apps, வலைத்தளம், ஆவணம் ஆகியவற்றின் ஸ்கிரீன்ஷாட்களை 5 விநாடிக்கு ஒருமுறை எடுத்து சேமிக்கிறது.
பின்னர், AI அந்த படங்களை ஆய்வு செய்து, நீங்கள் தேடும் தகவலை எளிதில் கண்டுபிடிக்க உதவுகிறது.
ஆனால், இந்த அம்சம் தனியுரிமை மீறல் என பல நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
UK Information Commissioner’s Office, “இது பயனர்களின் தனியுரிமைக்கு ஆபத்தானது” என்று Microsoft-க்கு நேரடியாகக் கடிதம் அனுப்பியுள்ளது.
University of Pennsylvania-வின் பாதுகாப்பு ஆய்வாளர்கள், “Recall அம்சம் சட்ட, பாதுகாப்பு, தனியுரிமை சவால்களை உருவாக்குகிறது” என்று எச்சரித்துள்ளனர்.
Microsoft, பயனர்கள் விரும்பினால் இந்த அம்சத்தை Settings → Privacy & Security → Recall & Snapshots பகுதியில் சென்று OFF செய்யலாம் என்று அறிவித்துள்ளது.
Android மற்றும் iPhone-இல் Accessibility Permissions-ஐ சரிபார்த்து, தேவையற்ற செயலிகளை நீக்குவதன் மூலம் பாதுகாப்பாக இருக்கலாம்.
இந்த அம்சம், பயனுள்ள வசதியா? அல்லது கண்காணிப்பா? என்ற கேள்வியை உலகளவில் எழுப்பியுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan