Paristamil Navigation Paristamil advert login

இந்திய அணியில் இடம் பிடித்த ராகுல் டிராவிட்டின் மகன் அன்வே

இந்திய அணியில் இடம் பிடித்த ராகுல் டிராவிட்டின் மகன் அன்வே

12 ஆனி 2026 வெள்ளி 15:08 | பார்வைகள் : 203


இலங்கை சுற்றுப்பயணம் செல்ல இந்திய U19 அணி, வரும் ஜூலை 4ஆம் திகதி முதல் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இதற்கான இந்திய U19 ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்திய U19 ஒருநாள் அணியில், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் ராகுல் டிராவிட்டின்  இளைய மகன் அன்வே டிராவிட் இடம் பிடித்துள்ளார்.

17 வயதான அன்வே டிராவிட், கர்நாடக யு19 அணியின் அணித்தலைவராக செயல்பட்டு, கடந்த வினோ மன்கட் டிராபி தொடரில் 6 போட்டிகளில் விளையாடி 220 ஓட்டங்கள் குவித்து கவனம் ஈர்த்தார்.

முன்னதாக 2024ஆம் ஆண்டு ராகுல் டிராவிட்டின் மூத்த மகன் சமித் டிராவிட், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய U19 அணியில் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், காயம் காரணமாக அவர் அந்த தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்தார்.

தற்போது டிராவிட்டின் இளைய மகன் இந்திய U19 ஒருநாள் அணியில் விக்கெட் கீப்பராக இடம் பிடித்துள்ளார்.