ஹார்முஸ் நீரிணையில் பதற்றம் - மீண்டும் சரக்கு கப்பல்களை குறிவைத்த ஈரான்
12 ஆனி 2026 வெள்ளி 14:45 | பார்வைகள் : 191
ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்த முயற்சித்ததாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
உலகின் முக்கிய வணிக வழிப்பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் நேற்று இரவு ஒரு வழித் தாக்குதல் ட்ரோன்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்த முயற்சித்ததாக Fox செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
வணிக சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்த முயற்சித்த ஈரானிய ட்ரோன்களை அமெரிக்க படைகள் இடைமறித்து சுட்டு வீழ்த்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து தடையின்றி நடைபெற்று வருவதாகவும் உறுதிப்படுத்தியுள்ளது.
ஈரானின் தெற்கே உள்ள சிரிக் கடல் பிராந்தியத்தில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக ஈரானிய அரசு ஊடகமான IRIB தகவல் தெரிவித்துள்ளது.
ஈரானின் விதிமுறைகளை மீறிய கப்பல் உடன் மோதல் ஏற்பட்டதாகவும், IRGC கடற்படையின் எச்சரிக்கைக்கு பிறகு அந்த சரக்கு கப்பல் போக்குவரத்து தடையை பின்பற்ற கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் ஈரானிய தரப்பு விளக்கம் கொடுத்துள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan