Paristamil Navigation Paristamil advert login

கட்சிகள் இணைப்பு இல்லை : காங்கிரஸ் - திரிணமுல் காங்கிரஸ் மறுப்பு

கட்சிகள் இணைப்பு இல்லை : காங்கிரஸ் - திரிணமுல் காங்கிரஸ்  மறுப்பு

12 ஆனி 2026 வெள்ளி 08:11 | பார்வைகள் : 131


காங்கிரஸ் திரிணமுல் காங்கிரஸ் கட்சிகள் இணைப்பு என்பது வதந்தி. இதற்கு ஆதாரம் இல்லை என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே சி வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்திற்கு நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., அலையில் 15 ஆண்டு கால ஆட்சியை திரிணமுல் காங்., கட்சி பறிகொடுத்தது. குறிப்பாக மம்தா பானர்ஜியின் உறவினரான அபிஷேக் பானர்ஜி மீதான கட்சித் தலைவர்களின் அதிருப்தி, பொதுமக்களின் ஆத்திரம் இந்த தேர்தலில் பெருமளவு எதிரொலித்தது.

தேர்தல் தோல்விக்கு பின், கட்சிக்குள் உட்கட்சி பூசல் வெடித்தது. 100க்கும் மேற்பட்ட திரிணமுல் காங்., கவுன்சிலர்கள் ராஜினாமா செய்தனர். மம்தாவின் விருப்பத்துக்கு மாறாக கிளர்ச்சியில் ஈடுபட்ட அதிருப்தி எம்.எல்.ஏ., ரிதபிரதா பானர்ஜியை எதிர்க்கட்சித் தலைவராக்க 60 எம்.எல்.ஏ.,க்கள் அணி திரண்டனர்.

மறுபுறம் லோக்சபாவில், திரிணமுல் காங்., கொறடாவாக இருந்த ககோலி கோஷ் தஸ்திதாரும், மொத்தம் உள்ள 28 எம்.பி.,க்களில் 20 எம்.பி.,க்களை தன்னுடன் சேர்த்துக் கொண்டு, கட்சிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளார்.

பார்லி.,யில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு தரவுள்ளதாகவும் அறிவித்துள்ளார். இதனால், கட்சிக்குள் செல்வாக்கை இழந்துள்ள மம்தா பானர்ஜி, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு காங்., கட்சியுடன் நெருக்கம் காட்டி வருகிறார். 'இண்டி' கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.

டில்லியிலேயே மம்தா முகாமிட்டு இருந்தது பல்வேறு யூகங் களுக்கு வித்திட்டது.

கடந்த 1997ல் காங்., கட்சியில் இருந்து பிரிந்து தனியாக திரிணமுல் காங்., கட்சியை உருவாக்கிய மம்தா பானர்ஜி, தன் அரசியல் வாழ்க்கைக்காகவும், உறவினரான அபிஷேக் பானர்ஜியின் எதிர்காலத்துக்காகவும், கட்சியை மீண்டும் தாய் கட்சியுடன் இணைக்கும் முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போதைய சூழலில் காங்., கட்சியுடன் இணைந்தால், தேசிய அளவில் மம்தாவுக்கும், அவரது உறவினரான அபிஷேக் பானர்ஜிக்கும் பொறுப்புகள் கிடைக்கக் கூடும் என அரசியல் விமர்சகர்களும், மூத்த பத்திரிகையாளர்களும் கருத்து தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாகவே, டில்லியில், காங்., முன்னாள் தலைவர் சோனியாவை தனியே சந்தித்து அவர் நீண்ட நேரம் பேசினார். மேலும், அபிஷேக் பானர்ஜியும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலை தனியே சந்தித்து விரிவாக விவாதித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அதே சமயம், அதிருப்தி எம்.எல்.ஏ.,வான ரிதபிரதா பானர்ஜி, தாய் கட்சியுடன் இணைப்பதற்கான வாய்ப்பே இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ள

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் வேணுகோபால் டெல்லியில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் காங்கிரஸ் திரிணமுல் காங்கிரஸ் இணைப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர் அளித்த பதில்

வதந்திகளுக்கும் யுகங்களுக்கும் நான் எப்படி பதில் அளிக்க முடியும்

இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. பாஜா அரசின் ஜனநாயக விரோத செயல்களுக்கு எதிராக இணைந்து போராடுவோம். இண்டி கூட்டணி தலைவர்களுக்கு இடையே நடக்கும் ஆலோசனைகளின் ஒரு பகுதியாக இறுதிச் தலைவர்களும் சந்தித்தனர். இவ்வாறு அவர் கூறினார்

திரிணமுல் காங்கிரஸ் எம்பி கீர்த்தி ஆசாத் கூறியதாவது: இணைப்பு நடக்காது . அது தவறான செய்தி தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவோம் . கூட்டணி உறுதியாக உள்ளது என்றார்