Paristamil Navigation Paristamil advert login

அதிக படங்களில் நடிக்கும் ஹீரோ யார் தெரியுமா?

அதிக படங்களில் நடிக்கும் ஹீரோ யார் தெரியுமா?

11 ஆனி 2026 வியாழன் 15:20 | பார்வைகள் : 302


தமிழ்சினிமாவில் மட்டுமல்ல, இந்திய சினிமாவிலேயே அதிக படத்தில் நடித்துகொண்டிருக்கும் ஹீரோ யார் என்றால் எல்லாரும் விஜய் சேதுபதியை கை காண்பிக்கிறார்கள். இப்போது அவர் மிஷ்கின் இயக்கத்தில் நடித்த "டிரைன்" வர தயாராக இருக்கிறது. பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் நடித்த "ஸ்லம்டாக்" படமும் முடிந்துவிட்டது. இப்போது பாலாஜிதரணிதரன் இயக்கத்தில் "பக்தா", தியாகராஜன்குமாரராஜா இயக்கத்தில் "பாக்கெட் நாவல்" படங்களில் நடிக்கிறார்.

அடுத்து மணிரத்னம் இயக்கத்திலும், அதற்கடுத்து கிருத்திகா உதயநிதி இயக்கத்திலும் நடிக்கப்போகிறார். இந்த படங்கள், தெலுங்கு, இந்தியிலும், ஓடிடியில் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடக்கிறது. அவரை வைத்து படம் பண்ண ஏகப்பட்ட இயக்குனர்கள் ஸ்கிரிப்ட்டுடன், ஏகப்பட்ட தயாரிப்பாளர்கள் அட்வான்சுடன் காத்திருக்கிறார்கள். இந்தியாவில் இந்த அளவுக்கு பிஸியான ஹீரோ யாரும் இல்லை என்கிறார்கள். இப்படிதான் ஒரு காலத்தில் விஜய்ஆண்டனி இருந்தார். அவர் கைவசமும் நிறைய படங்கள் இருந்தது. ஆனால், கதை தேர்வு, தோல்வி காரணமாக அவர் மார்க்கெட் நிலவரம் மாறிவிட்டது. அதனால், விஜய்சேதுபதி கவனமாக இருக்க வேண்டும். சம்பளத்துக்காக வேலை பார்க்க கூடாது. கதை, மனதிருப்பதி, சூழ்நிலை அறிந்தும் படங்களில் நடிக்க வேண்டும் என்கிறார்கள் அவரின் நெருக்கமான நண்பர்கள்