Paristamil Navigation Paristamil advert login

விமானங்களில் அதிவேக Wi-Fi - போட்டியில் அமேசானை முந்திய Starlink

விமானங்களில் அதிவேக Wi-Fi - போட்டியில் அமேசானை முந்திய Starlink

10 ஆனி 2026 புதன் 12:47 | பார்வைகள் : 255


உலகளாவிய விமான நிறுவனங்கள், பயணிகளுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கும் நோக்கில், Wi-Fi சேவையை முக்கிய அம்சமாகக் கருதத் தொடங்கியுள்ளன.

இதனால், எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் மற்றும் ஜெஃப் பெசோஸின் அமேசான் லியோ இடையே கடுமையான போட்டி உருவாகியுள்ளது.

ஸ்டார்லிங்க் தற்போது விண்வெளியில் உள்ள செயற்கைக்கோள்களில் மூன்றில் இரண்டு பங்கை இயக்குகிறது. 2026-இல் மட்டும் 11 புதிய விமான நிறுவனங்கள் ஸ்டார்லிங்கைத் தேர்வு செய்துள்ளன.

அமெரிக்கன் ஏர்லைன்ஸ், சவுத் வெஸ்ட் போன்ற நிறுவனங்கள், “வேகமான சேவை மற்றும் எளிய நிறுவல்” காரணமாக ஸ்டார்லிங்கை விரும்புகின்றன.

அமேசான் லியோ, டெல்டா மற்றும் ஜெட் ப்ளூவுடன் ஒப்பந்தம் செய்து, 2028 முதல் 500 விமானங்களில் சேவையை வழங்கத் திட்டமிட்டுள்ளது. ஆனால், சமீபத்திய ப்ளூ ஆரிஜின் ரொக்கெட் தோல்வி, அதன் வளர்ச்சிக்கு சவாலாக உள்ளது.

விமானங்களில் Wi-Fi அமைப்பது மிகப்பெரிய முதலீடாகும். அமெரிக்கன் ஏர்லைன்ஸ், 500 விமானங்களில் ஸ்டார்லிங்கை நிறுவுவதற்கே 150 முதல் 250 மில்லியன் டொலர் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சில நிறுவனங்கள், குறிப்பாக ரையனேர், அதிக செலவு மற்றும் எரிபொருள் நுகர்வு காரணமாக ஸ்டார்லிங்கை நிராகரித்துள்ளன. ஆனால், பெரும்பாலான விமான நிறுவனங்கள், பயணிகளின் நம்பிக்கையைப் பெறவும், கூடுதல் வருவாய் வாய்ப்புகளை உருவாக்கவும், வேகமான Wi-Fi-ஐ அத்தியாவசியம் எனக் கருதுகின்றன.

ஸ்டார்லிங்க் தற்போது 7,000-க்கும் மேற்பட்ட விமானங்களில் ஒப்பந்தம் பெற்றுள்ளது. இதனால், விமான Wi-Fi துறையில் அது முன்னிலை வகிக்கிறது.

அமேசான், தனது கிளவுட் மற்றும் ரீட்டெயில் சேவைகளுடன் இணைந்த முழுமையான தொழில்நுட்ப சூழலை வலியுறுத்தி போட்டியிடுகிறது.