Paristamil Navigation Paristamil advert login

வட அயர்லாந்தில் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக வெடித்துள்ள வன்முறை

வட அயர்லாந்தில் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக வெடித்துள்ள வன்முறை

10 ஆனி 2026 புதன் 11:51 | பார்வைகள் : 177


வட அயர்லாந்து நகரமொன்றில் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக வெடித்துள்ள வன்முறையைத் தொடர்ந்து புலம்பெயர்ந்தோரின் வீடுகள், கார்களுக்கு தீவைக்கப்பட்டுள்ளது.

சூடான் நாட்டைச் சேர்ந்த 30 வயது நபர் ஒருவர் பிரித்தானியாவில் புகலிடம் கோரிய நிலையில், பிரித்தானியாவில் தங்கியிருக்க அவருக்கு அனுமதியளிக்கப்பட்டது.

ஆனால், அவர் திங்கட்கிழமை இரவு Belfast நகரில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவரை கத்தியால் தாக்கியுள்ளார்.

அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் தாக்கப்பட்ட நபரைக் காப்பாற்றியதுடன் அந்த சூடான் நாட்டவரை பிடித்துவைத்துள்ளார்கள். பொலிசார் அவரை கைது செய்துள்ளார்கள்.

அந்த சூடான் நாட்டவர் தாக்குதல் நடத்தும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவ, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சிலர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளார்கள்.

அப்போது, முகமூடி அணிந்த சுமார் 100 இளைஞர்கள் அங்கு வந்து கார்கள், குப்பைத்தொட்டிகளுக்கு தீவைத்துள்ளார்கள். பேருந்து ஒன்றிற்கும் தீவைக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்தியவர் புலம்பெயர்ந்தோர் என்பதால், புலம்பெயர்ந்தோர் வாழும் வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன, தீவைக்கப்பட்டுள்ளன. அங்கு வாழும் புலம்பெயர்ந்தோர் வீடுகளை விட்டு தப்பியோடும் நிலை உருவாகியுள்ளது.

இந்த தாக்குதலுக்கு, பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், வட அயர்லாந்தின் அனைத்துக் கட்சி அரசியல்வாதிகள் உட்பட ஏராளமானோர் கண்டனம் தெரிவித்துவருகிறார்கள்.