Paristamil Navigation Paristamil advert login

நீதித்துறையின் செயலிழப்புகளை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் — இயக்குநர் கைது!

நீதித்துறையின் செயலிழப்புகளை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் — இயக்குநர் கைது!

9 ஆனி 2026 செவ்வாய் 19:12 | பார்வைகள் : 599


திரைப்பட இயக்குநர் ஓந்தரியா பெக்கோந்த் (Andréa Bescond), திங்கட்கிழமை இரவு நீதித்துறை அமைச்சகத்தின் முன் நடைபெறும் ஒரு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

அந்த போராட்டத்தில் பங்கேற்றபோது அவர் காவற்துறையால் கைது செய்யப்பட்டு, செவ்வாய்க்கிழமை காலை விடுவிக்கப்பட்டார் என்று  காவல்துறை மூலங்கள் தெரிவித்தன.

போராட்டத்தின் காரணம் : சிறுமி Lyhanna கொலைக்குப் பிறகு எழுந்த கோபம்

"Les Chatouilles" திரைப்படத்தின் இயக்குநரான பெக்கோந்த், பரிஸ், Place Vendôme பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றபோது கைது செய்யப்பட்டார்

இந்த போராட்டம், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறை வழக்குகளை நீதித்துறை தவறாக கையாளுகிறது என்ற குற்றச்சாட்சாட்டில் நடத்தப்பட்டது

இது சிறுமி Lyhanna கொலை வழக்குக்குப் பிறகு எழுந்த பொதுமக்கள் கோபத்தின் தொடர்ச்சி

போராட்டம் தடைசெய்யப்பட்டது — இரண்டு இடங்களில் மக்கள் திரண்டனர்

பரிஸ் காவற்துறை ஆணையகம், Place Vendôme‑இல் போராட்டத்தை தடைசெய்தது

மாற்றாக Place Lépine (பாரிஸ் மேல் முறையீட்டு நீதிமன்றம் முன்) இடத்தை முன்மொழிந்தது

இறுதியில்:

இரண்டு தனித்தனி போராட்டங்கள் நடைபெற்றன

ஒன்று Place Vendôme

ஒன்று Place Lépine