Paristamil Navigation Paristamil advert login

செம்மணி மனித புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்ட 8 சிறுவர்களுடைய என்புகூடுகள்

செம்மணி மனித புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்ட 8 சிறுவர்களுடைய என்புகூடுகள்

9 ஆனி 2026 செவ்வாய் 15:28 | பார்வைகள் : 137


செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் 08 சிறுவர்களுடைய என்பு கூட்டு தொகுதிகள் உட்பட 09 என்பு கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன் , ஒரு என்பு கூட்டின் மேல் இருந்து நாணய குற்றி ஒன்றும் சான்று பொருளாக மீட்கப்பட்டுள்ளது.

அதேவேளை சிசுவினுடைய என்பு கூட்டு தொகுதி ஒன்று உட்பட 09 என்பு கூட்டு தொகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 20ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் நடைபெற்றது.

அதன் போது ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்ட சிறுவர்களுடைய 08 என்பு கூட்டு தொகுதி உட்பட 09 என்பு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் மேலும் சிசுவினுடைய என்பு கூடு உட்பட 09 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , அவற்றை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதேவேளை இன்றைய அகழ்வு பனியின் போது என்பு கூடொன்றின் மீதிருந்து நாணய குற்றி ஒன்று மீட்கப்பட்டு , சான்று பொருளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் செம்மணியில் இதுவரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற அகழ்வு பணிகளின் போது 327 மனித என்பு கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் , 311 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.