பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு - 30 பேர் பலி
9 ஆனி 2026 செவ்வாய் 14:43 | பார்வைகள் : 256
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அரசுக்கு எதிராகவும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் மனித உரிமை அமைப்பினால் இன்று (9) நடத்தப்பட்ட போராட்டத்தில் பாகிஸ்தான் இராணுவத்தினால் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதலில் 30 பேர் உயிரிழந்ததாகவும் 200க்கு மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் அரசுக்கு எதிராகவும் மின்சாரம், உணவுப் பொருளில் மானியம் உட்பட 38 கோரிக்கைகளை முன்வைத்து ஆயிரக்கணக்கானோர் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறித்த காஷ்மீர் பகுதியில் நிலவி வரும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக பல விதமாக கோஷங்களை எழுப்பினர்.
அவ்வேளை பாகிஸ்தான் இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறித்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
20 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan