Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் உணவகம் ஒன்றில் தீ விபத்து - மூவர் உயிரிழப்பு!

இலங்கையில்  உணவகம் ஒன்றில் தீ விபத்து - மூவர் உயிரிழப்பு!

9 ஆனி 2026 செவ்வாய் 13:46 | பார்வைகள் : 218


தலவத்துகொட சந்திக்கு அருகில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (09) முற்பகல் குறித்த உணவகத்தில் தீ பரவியுள்ளதுடன், தீயைக் கட்டுப்படுத்துவதற்காக கோட்டே மாநகர சபைக்குச் சொந்தமான 3 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

சமையல் எரிவாயு கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பாக தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.