ஈரான் மீது மீண்டும் இஸ்ரேல் தாக்குதல் - நெதன்யாகுவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை
9 ஆனி 2026 செவ்வாய் 11:30 | பார்வைகள் : 244
ஈரான் மீது மீண்டும் இஸ்ரேல் தாக்குதல்கள் நடத்தினால் சர்வதேச சமூகத்தில் இஸ்ரேல் முற்றிலும் தனிமைப்படுத்தப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
இஸ்ரேல் பிரதமருடன் தான் தொலைபேசியில் பேசியதைப் பற்றி ட்ரம்ப் ஒரு நேர்காணலில் கூறியிருந்தார். அவ்வேளை அவர் நெதன்யாகுவை, அவரது பட்டப்பெயரான “பீபி” (Bibi) என்று குறிப்பிட்டார்.
“நான் நெதன்யாகுவை நேரடியாகத் தொலைபேசியில் அழைத்து உடனடியாக தாக்குதல்களை நிறுத்தும்படி கூறினேன்.
'பீபி நீங்கள் இனிமேல் மிகவும் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. இல்லையெனில், மிக விரைவில் நீங்கள் உலக நாடுகளிலிருந்து முற்றிலும் தனிமைப்படுத்தப்படுவீர்கள்' என்று நான் அவரிடம் தீர்க்கமாகக் கூறிவிட்டேன்” என்று தெரிவித்தார்.
லெபனானை அத்துமீறி தாக்கி வரும் இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரான் மீது நேற்று (8) அதிகாலை இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதனால் ஈரானுடன் அமெரிக்கா நடத்தி வந்த அமைதிப் பேச்சுவார்த்தை சீர்குலையும் நிலை காணப்பட்டது.
முன்னதாகவே “ஈரானை தாக்க வேண்டாம்” என ட்ரம்ப், தொலைபேசியில் நெதன்யாகுவை அழைத்து எச்சரித்ததாக தகவல் வெளியானது. இதனிடையே நேற்றும் (8) பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதையடுத்து, “இனி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படமாட்டாது” என ஈரான் அறிவித்தது.
அதனையடுத்தே நெதன்யாகுவை தொலைபேசியில் அழைத்து ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
20 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan