ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் வெடித்துச் சிதறிய அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர்
9 ஆனி 2026 செவ்வாய் 09:52 | பார்வைகள் : 279
ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் வெடித்துச் சிதறியது.
ஹோர்முஸ் நீரிணையை பிற நாடுகளின் கப்பல்கள் செல்ல ஈரான் தொடர்ந்து அச்சுறுத்தி வரும் நிலையில், அமெரிக்க பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த வாரம் ஹோர்முஸ் நீரிணை மீது நான்கு ஈரானிய டிரோன்கள் ஏவப்பட்டதாகவும் அதனை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியதாகவும் அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க பாதுகாப்புப் படையின் அப்பாச்சி ரக ஹெலிகாப்டர் திங்கள்கிழமை வெடித்துச் சிதறியதாக நியூயார்க் டைம்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், இரண்டு விமானிகளும் உயிர்த் தப்பியதாகவும், ஹெலிகாப்டர் மீது ஈரான் படைகள் தாக்குதல் நடத்தியதா அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வெடித்ததா என்பது தெரியவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை உறுதி செய்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், விமானிகள் இருவரும் காயமின்றி மீட்கப்பட்டதாகவும், ஆய்வுக்குப் பிறகு அறிக்கை வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
20 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan