Paristamil Navigation Paristamil advert login

திமுக ஆட்சியில் மின்வாரிய டிரான்ஸ்பார்மர் கொள்முதல் முறைகேடு குற்றச்சாட்டு; சிபிஐ வழக்குப்பதிவு

திமுக ஆட்சியில் மின்வாரிய டிரான்ஸ்பார்மர் கொள்முதல் முறைகேடு குற்றச்சாட்டு; சிபிஐ வழக்குப்பதிவு

9 ஆனி 2026 செவ்வாய் 10:58 | பார்வைகள் : 523


தமிழ்நாடு மின்வாரிய டிரான்ஸ்பார்மர் கொள்முதல் முறைகேடு விவகாரத்தில் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

திமுக ஆட்சிக்காலத்தில் 2021ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை செந்தில் பாலாஜி மின்துறை அமைச்சராக பதவி வகித்தார். அவரின் பதவிக் காலத்தில் மின்மாற்றிகள் கொள்முதல் செய்தது தொடர்பாக ரூ.397 கோடி ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதாவது, மின்மாற்றிகளை வாங்கியதில் கூட்டுச் சதி மற்றும் சந்தை விலையை விட அதிக விலைக்கு டெண்டர் விடப்பட்டதன் மூலம் அரசக்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்பட்டது என்பதே குற்றச்சாட்டாகும். இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த ஏப்.29ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதன்மூலம் சிபிஐ விசாரணை என்பது உறுதியானது. நீதிமன்ற உத்தரவின் பேரில், சென்னையில் உள்ள சிபிஐயின் ஊழல் தடுப்புப்பிரிவானது, டான்ஜெட்கோ முன்னாள் அதிகாரிகள் மற்றும் தனியார் ஒப்பந்ததாரர்கள் மீது வழக்குபபதிவு செய்திருக்கிறது.

குற்றவியல் சதி, மோசடி தொடர்பான இந்திய தண்டனை சட்டப்பிரிவுகள், ஊழல் தடுப்புச் சட்ட விதிகள் கீழ் வழக்குகள் பதிவாகி இருக்கின்றன.