விண்வெளியில் Satellite எடுத்த செல்பி
5 ஆடி 2022 செவ்வாய் 16:06 | பார்வைகள் : 18259
2013 ஆம் ஆண்டில், 'செல்ஃபி' என்ற வார்த்தை ஆக்ஸ்போர்டு அகராதிகளின் 'word of the year' ஆகும். முந்தைய ஆண்டுகளில் இந்த கருத்து புதியதாக இருந்தது. ஆனால் அப்போதிருந்து, இந்த வார்த்தையும் செல்ஃபி புகைப்படங்களும் நம் வாழ்க்கையோடு ஒன்றிவிட்ட வார்த்தையாகவும் அங்கமாகவும் ஆகி விட்டது.
நாம் எந்த இடத்திற்கு போனாலும், அங்கிருக்கும் இயற்கை சூழ்நிலையில் செல்ஃபி எடுத்து கொள்ளும் பழக்கம் பலருக்கு உள்ளது. குடும்ப விழாக்களின் போது, செல்ஃபியைக் கிளிக் செய்யாதவர்கள் யாராவது உண்டா என்ன. நாம் நண்பர்களுடன் இருந்தாலும், செல்ஃபி கிளிக் செய்கிறோம். சிறப்பான அல்லது விசேஷமான ஒரு நிகழ்வு என்றாலோ, விருந்து, திருமணம், விழா என எதுவாக இருந்தாலும், அங்கு எடுக்கப்பட்ட செல்ஃபி புகைப்படம் சிறிது நேரத்தில் சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்படுவதை பார்க்கிறோம்.
இந்நிலையில், ஒரு செயற்கைக்கோள் தற்போது கிரேட் பேரியர் ரீஃப் (Great Barrier Reef) அதாவது, பெருந் தடுப்புப் பவளத்திட்டு என்னும் உலகின் மிகப் பெரிய பவளப்பாறை பின்னணியில் செல்ஃபி எடுத்துள்ளது. புகைப்படத்தை கிளிக் செய்ய செயற்கைக்கோள் செல்ஃபி ஸ்டிக்கைப் பயன்படுத்தியது. நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான இந்த செயற்கைக்கோள், பூமியின் மேற்பரப்பில் இருந்து 550 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுற்றுப்பாதையில் பூமியைச் சுற்றி வருகிறது.
MP42 என்று பெயரிடப்பட்ட மைக்ரோசாட்லைட் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் விண்ணில் ஏவப்பட்டது. இது SpaceX Falcon 9 ராக்கெட் மூலம் பயணம் செய்தது.
"செயற்கைக்கோள்கள் மூலம், நமது கிரகத்தின் பாதிப்பு மற்றும் பூமியை செயற்கை கோள் மூலம் கண்காணிக்கும் முக்கியத்துவத்தை, குறிப்பாக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றங்களை கண்காணிப்பதற்காக இந்த செயற்கை கோள் அனுப்பப்பட்டுள்ளது" என்று மைக்ரோசாட்லைட்டின் உரிமையாளரான NanoAvionics நிறுவனம் தெரிவித்துள்ளது. நிறுவனம் யூடியூப்பில் இது தொடர்பான வீடியோவையும் வெளியிட்டுள்ளது.
கிரேட் பேரியர் ரீஃப் என்பது உலகின் மிகப்பெரிய பவளப்பாறை அமைப்பாகும். இது ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு கடற்கரையில் 2300 கிலோமீட்டர்களுக்கு மேல் நீண்டுள்ளது. செல்ஃபி, மற்றும் வீடியோ GoPro Hero 7 மூலம் எடுக்கப்பட்டது. கேமரா செல்ஃபி ஸ்டிக்கில் பொருத்தப்பட்டது.
கிரேட் பேரியர் ரீஃப் பகுதிக்கு பாதுகாப்பு தேவை. புவி வெப்பமடைதல் காரணமாக இந்த பாறைகள் 'மாஸ் ப்ளீச்சிங்' செய்யப்படுவதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் அறிக்கை கூறியது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan