பிலிப்பைன்ஸில் 7.7 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை
8 ஆனி 2026 திங்கள் 10:41 | பார்வைகள் : 501
பிலிப்பைன்ஸ் - மின்டானோ தீவில் 7.7 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதீச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து பிலிப்பைன்ஸ் , இந்தோனேசியா , மலேசியா நாடுகளின் கரையோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து வீடுகளில் இருந்த மக்கள் விரைந்து வெளியேறினர். நிலநடுக்கம் உணரப்பட்ட இடத்தில் வீடுகள் மற்றும் அலுவலகம், வணிக கட்டிடங்களில் இருந்த தொலைக்காட்சி, நாற்காலி, மேசை உள்ளிட்ட பொருட்கள் விழுந்த காணொளி வெளியாகியுள்ளது.
சமூக வலைதளத்தில் வீடியோவில் வணிக கட்டிடம் ஒன்று இடிந்து விழுவதும், சாலை போக்குவரத்து சிக்னல் சந்திப்பில் உள்ள சிக்னல் விளக்குகள் குலுங்குவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan