ஆறு ரஷ்ய விமானங்களை இடைமறித்த பிரெஞ்சு ரஃபேல் விமானங்கள்!!
7 ஆனி 2026 ஞாயிறு 13:47 | பார்வைகள் : 1893
நேட்டோவின் பால்டிக் வான்வெளி காவல் பணியின் ஒரு பகுதியாக, லிதுவேனியாவில் உள்ள lituanienne de Šiauliai விமானத் தளத்தில் இருந்து இரண்டு பிரெஞ்சு ரஃபேல் போர் விமானங்கள் அவசரமாக புறப்பட்டு ஆறு ரஷ்ய விமானங்களை இடைமறித்தன. இந்த சம்பவம் ஜூன் 2 அன்று நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடைமறிக்கப்பட்ட ரஷ்ய விமானங்களில் Su-35S, Su-34, Su-24 போர் விமானங்கள், Il-76 இராணுவப் போக்குவரத்து விமானம் மற்றும் An-12, An-30 உளவு விமானங்கள் அடங்கும். இந்த நடவடிக்கையில் இரண்டு ஸ்வீடிஷ் கிரிப்பென் (Gripen suédois) போர் விமானங்களும் பிரெஞ்சு ரஃபேல்களுடன் இணைந்து செயல்பட்டன.
பிரான்ஸ் வான்படை தற்போது நான்கு ரஃபேல் B விமானங்களை லிதுவேனியாவில் நிறுத்தியுள்ளது. இவை நேட்டோவின் "Baltic Air Policing" பணிக்காக பயன்படுத்தப்படுகின்றன. இந்த பணி 2004 முதல் பால்டிக் நாடுகளின் வான்வெளி பாதுகாப்பை உறுதி செய்து வருகிறது.
ரஷ்யாவுக்கு அருகில் அமைந்துள்ள பால்டிக் நாடுகள் அடிக்கடி இராணுவ விமான நடவடிக்கைகளால் சவால்களை எதிர்கொள்கின்றன. அதனால், நேட்டோவின் இந்த வான்வெளி காவல் பணி பிராந்திய பாதுகாப்பையும் தடுப்புத் திறனையும் வலுப்படுத்தும் முக்கியமான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan