கடந்த ஆட்சியை போலவே வேளாண் தனி பட்ஜெட்; அமைச்சர் வினோத் தகவல்
7 ஆனி 2026 ஞாயிறு 10:56 | பார்வைகள் : 499
கடந்த ஆட்சி போலவே, தற்போதும் வேளாண் தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும், என வேளாண்துறை அமைச்சர் வினோத் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே கலம்பரம் கிராமத்தில், வாய்க்கால்கள் துார்வாரும் பணியை வேளாண்துறை அமைச்சர் வினோத் துவக்கி வைத்தார்.பின், நிருபர்களிடம் அவர் கூறுகையில், “மேட்டூர் அணை விரைவில் திறக்கப்படும். கடந்த ஆட்சி, போலவே தற்போதும், வேளாண் தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்,” என்றார்.
இதற்கிடையே, இன்று அமைச்சர் நிகழ்ச்சி என கூறியதால், அதிகாரிகள், விவசாயிகள், கிராம மக்கள் துார்வாரும் பணி துவக்க விழாவுக்காக, முன்னதாகவே வந்து காத்திருந்தனர். ஆனால், அமைச்சர் வினோத் இரண்டு மணி நேரம் தாமதமாக வந்ததால், விவசாயிகள், அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் அதிருப்தி அடைந்தனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan