Paristamil Navigation Paristamil advert login

ஹார்முஸ் நீரிணையை மூடுவோம் - அமெரிக்காவுக்கு ஈரான் பகீர் எச்சரிக்கை

ஹார்முஸ் நீரிணையை  மூடுவோம் - அமெரிக்காவுக்கு ஈரான் பகீர் எச்சரிக்கை

6 ஆனி 2026 சனி 14:21 | பார்வைகள் : 162


மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரித்துள்ள பதற்றத்துக்கு மத்தியில் அமெரிக்காவுக்கு ஈரான் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

ஈரான் படைகள் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தினால் அதற்கான பதிலடி எல்லையற்றதாக இருக்கும் என்று ஈரான் கடுமையாக எச்சரித்துள்ளது.

அதிலும் குறிப்பாக உலகளாவிய எரிசக்தி சந்தையின் முக்கியமான வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை முழுவதுமாக மூடி, உலக நாடுகளுக்கு செல்லும் எரிபொருள் போக்குவரத்தை முற்றிலுமாக தடை செய்வோம் என்று ஈரான் எச்சரித்துள்ளது.

உருவாகியுள்ள இந்த புதிய பதற்றமான சூழல் காரணமாக உலகளாவிய எரிசக்தி விநியோகம் மிகப்பெரிய கவலைக்கு உள்ளாகியுள்ளது.

பிரதானமான கடல் வழி பாதையான ஹார்முஸ் ஜலசந்தி மூடப்படுவது தொடர்பான எச்சரிக்கை பல்வேறு உலக நாடுகளையும் கவலையில் தள்ளியுள்ளது.

அமெரிக்காவின் வழிகாட்டுதலின் பெயரில் இயங்கி வந்த 4 கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக அனுமதி பெறாமல் கடக்க முயன்றதை அடுத்து அதில் ஒரு கப்பலை ஈரான் தாக்கி சிறைப்பிடித்தது.

இதனை தொடர்ந்து ஈரானின் கெஷ்ம் தீவு மற்றும் சிரிக் பகுதியில் அமைந்துள்ள தகவல் தொடர்பு மையங்களை குறிவைத்து அமெரிக்கா ட்ரோன் தாக்குதல் நடத்தியது.

அமெரிக்காவின் இந்த அத்துமீறிய ட்ரோன் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக குவைத்தில் உள்ள அலி அல் சலீம் விமான தளம் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலை தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் பதற்றம் புதிய உச்சத்தை அடைந்துள்ளது.