Paristamil Navigation Paristamil advert login

இங்கிலாந்து 140, நியூஸிலாந்து 113 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் - சூடுபிடிக்கும் லார்ட்ஸ் டெஸ்ட்

இங்கிலாந்து 140, நியூஸிலாந்து 113 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் - சூடுபிடிக்கும் லார்ட்ஸ் டெஸ்ட்

6 ஆனி 2026 சனி 10:14 | பார்வைகள் : 180


லார்ட்ஸ் டெஸ்டில் நியூஸிலாந்து அணி 113 ஓட்டங்களுக்கு சுருண்டது.

நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது.

இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 140 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. ஹாரி ப்ரூக் (Harry Brook) 56 (71) ஓட்டங்கள் எடுத்தார்.

கைல் ஜேமிசன் 5 விக்கெட்டுகளும், நேதன் ஸ்மித் 3 விக்கெட்டுகளும், வில்லியம் ரூர்க் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூஸிலாந்து 29 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. க்ளென் பிலிப்ஸ் ஓரளவு தாக்குப்பிடித்து 34 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.  

எனினும், ஓலி ராபின்சனின் மிரட்டலான பந்துவீச்சில் விக்கெட்டுகள் தொடர்ந்து சரிந்தன. இதனால் நியூஸிலாந்து அணி 113 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இறுதிவரை களத்தில் நின்ற கைல் ஜேமிசன் 38 (29) ஓட்டங்கள் எடுத்தார். கைல் ஜேமிசன் 5 விக்கெட்டுகளும், ஜோஷ் டங் 3 விக்கெட்டுகளும், கஸ் அட்கின்ஸன் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து, 27 ஓட்டங்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி ஆடி வருகிறது.