ஜூலை மத்தியில் அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் பகுதி அமலுக்கு வரும்
6 ஆனி 2026 சனி 07:25 | பார்வைகள் : 273
ஜூலை மத்தியில் அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் பகுதி அமலுக்கு வரும் என மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்தார்.
பிரதமர் மோடியை ஒரு நல்ல நண்பர் என்று வர்ணித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவும், அமெரிக்காவும் விரைவில் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை எட்டும் என தெரிவித்தார். இந்த சூழலில் விசாகப்பட்டினத்தில் நிருபர்களிடம் பியூஷ் கோயல் கூறியதாவது:
இந்த மாதம் 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை நாங்கள் மிகச் சிறந்த பேச்சுவார்த்தைகளை நடத்தினோம். அமெரிக்காவின் வர்த்தக அதிகாரிகள் குழு டில்லிக்கு வந்து இருந்தது.
நானும் அவர்களைச் சந்தித்தேன்; நிலுவையில் உள்ள அனைத்து பிரச்னைகளையும் முடிவுக்கு கொண்டு வரும் வகையில் நாங்கள் வேகமாகச் செயல்பட்டு வருகிறோம். ஜூலை மத்தியில் அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் பகுதி அமலுக்கு வரும்.
இது எங்கள் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் கட்டம் மட்டுமே. இந்த மாத இறுதியில் இன்னும் உயர்மட்டத்திலான அதிகாரிகள் குழு ஒன்று இந்தியாவுக்கு வரும் என்று நான் எதிர்பார்க்கிறேன். இவ்வாறு பியூஷ் கோயல் கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan