கனிமவள கடத்தலை தடுக்க அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவு
5 ஆனி 2026 வெள்ளி 12:32 | பார்வைகள் : 236
கனிமவள வருவாயை பெருக்க, உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்; அவற்றை சட்ட விரோதமாக கடத்துவதை தடுக்க வேண்டும்' என முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
கனிமவள கடத்தலை தடுப்பது தொடர்பாக, தலைமைச் செயலகத்தில், முதல்வர் விஜய், ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் அமைச்சர்கள் ஆனந்த், பிரபு, மரிய வில்சன், தலைமைச் செயலர் சாய்குமார், நிதித்துறை செயலர் சித்திக், நீர்வளத்துறை செயலர் சத்யபிரதசாஹு, இயற்கை வளங்கள் துறை செயலர் சுன்சோங்கம் ஜடக் சிரு, தமிழ்நாடு கனிம நிறுவன மேலாண் இயக்குனர் சரவணவேல்ராஜ், புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குனர் மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய முதல்வர் விஜய், ''கனிமவளங்களை நீடித்த வளர்ச்சிக்கு பயன்படுத்தும் வகையில், முறையாக எடுத்து பயன்படுத்த வேண்டும்.
கனிமவள வருவாயை மேம்படுத்த, உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
சட்ட விரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதை தடுக்க, தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்,'' என, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
16 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan