Paristamil Navigation Paristamil advert login

ரூ.15.15 லட்சம் கோடி மோசடியில் சிக்கிய பெங்களூரு நிறுவனம்: செபி அதிரடி உத்தரவு

ரூ.15.15 லட்சம் கோடி மோசடியில் சிக்கிய பெங்களூரு நிறுவனம்: செபி அதிரடி உத்தரவு

5 ஆனி 2026 வெள்ளி 10:31 | பார்வைகள் : 208


பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட மிகப்பெரிய தங்க சுத்திகரிப்பு மற்றும் ஆபரண உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான, ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ரூ.15.15 லட்சம் கோடி  அளவுக்கு நிதி மோசடி புகாரில் சிக்கி உள்ளது . இது குறித்து விசாரணைக்கு செபி உத்தரவிட்டு உள்ளது.

இதன் காரணமாக, பங்குச்சந்தையில் மிகப்பெரிய பட்டியலிடப்பட்ட இந்த நிறுவனத்தின்  நிறுவனர் மற்றும் தலைவர் ராஜேஷ் மேத்தா, பங்கு வர்த்தகத்தில் ஈடுபட தடை விதிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2024ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி செபி அமைப்புக்கு இந்த நிறுவனம் குறித்து புகார் வந்தது.  அதில் பெரிய அளவிலான வர்த்தகம் மதிப்புள்ள தொகை குறித்து அதில் குற்றம்சாட்டப்பட்டது. இதனையடுத்து இந்த புகார் மீது செபி விசாரணையை துவங்கியது. இதற்காக  அதிகாரியை நியமித்தது. மேலும் ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் கணக்குகளை ஆய்வு செய்யவும், அந்த நிறுவனவம்  வெளியிட்ட நிதிசார் கணக்குகளை சரிபார்க்கவும்,  தனி அதிகாரியையும் நியமித்தது.

இந்த விசாரணையின்படி 2021 ம் நிதியாண்டு முதல் 2025 நிதியாண்டு வரை ராஜேஷ் எக்ஸ்போர்ட்சின் வருவாயில்  பெரும்பாலானவை,  அதன் வெளிநாட்டு துணை நிறுவவனங்களில் இருந்து வந்துள்ளது.  அது அந்த நிறுவனம் அறிவித்த மொத்த தொகையில் 97 முதல்99 சதவீதம்  வரையிலான  வருமானம் அதன் வெளிநாட்டு துணை நிறுவனங்கள் மூலமே கிடைத்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர்,  இந்த நிறுவனம் கையகப்படுத்திய சுவிட்சர்லாந்தில் உள்ள தங்க சுத்திகரிப்பு ஆலையான வால்காம்பியின் செயல்பாடே அதன் முதுகெலும்பாக இருந்தது.  ஆனால், வால்காம்பி மற்றும் பிற  துணை நிறுவனங்கள் தொர்பான கணக்குகளை ஆய்வு செய்த போது அதில் பெரிய முரண்பாடு இருந்தது கண்டறியப்பட்டது.வால்காம்பி நிறுவனத்தின் வருமானம்  குறைந்த அளவே பதிவாகி உள்ளது.ஐந்து ஆண்டுகளில் ரூ.15.15 லட்சம் கோடி அளவில் வேறுபாடு இருந்தது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து  ராஜேஷ் மோத்தா பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனை மறுத்துள்ள ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம், இந்த உத்தரவு இடைக்காலமானது. நிறுவனம் அறிவித்த வருமானம் சரியானது. எதுவும் மிகைப்படுத்தப்படவில்லை. செபிக்கும், நிறுவனத்திற்கும் இடையே ஒரு வித தகவல் தொடர்பு இடைவெளியும் குழப்பமும் உள்ளது. தேவையான மற்றும் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்து செபிக்கு அனைத்து அம்சங்களையும் தெளிவுபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம் எனத் தெரிவித்துள்ளது.