சர்வதேச T20 போட்டியில் வெறும் 5 பந்துகளில் வெற்றி பெற்றி அணி
4 ஆனி 2026 வியாழன் 15:34 | பார்வைகள் : 464
சவுதி அரேபியாவிற்கு எதிரான போட்டியில், வெறும் 5 பந்துகளில் இலக்கை எட்டி UAE அணி வெற்றி பெற்றுள்ளது.
2026 மகளிர் ஆசிய கிண்ண T20 தொடருக்கான தகுதி சுற்று போட்டிகள் மலேசியாவில் நடைபெற்று வருகிறது.
நேற்று நடைபெற்ற போட்டியில் பி பிரிவில் இடம்பெற்றுள்ள சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதியது.
நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாட்டம் ஆடிய சவுதி அரேபியா மகளிர் அணி, 15.3 ஓவர்களில் 27 ஓட்டங்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.
அதிகபட்சமாக அணித்தலைவி Mashael Waqas, 22 பந்துகளில் 9 ஓட்டங்கள் குவித்தார்.
28 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய UAE அணி, வெறும் 5 அதிகாரப்பூர்வ பந்துகளில் விக்கெட் இழப்பின்றி 30 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளது.
சவூதி அரேபியா பந்து வீச்சாளர் Mah Noor Aamir 10 வைடு, ஒரு நோ பால் என எக்ஸ்ட்ராஸ் மூலம் மட்டுமே 11 ஓட்டங்களை வழங்கியுள்ளார்.
தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அணித்தலைவி Esha Oza, 5 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்ஸர் என 15 ஓட்டங்கள் குவித்தார்.
மற்றொரு ஆட்டக்காரரான Theertha Satish 1 பந்தில் பவுண்டரி அடித்து 4 ஓட்டங்கள் எடுத்தார்.
115 பந்துகளை மிச்சம் வைத்து வெற்றி பெற்றதன் மூலம், ஐக்கிய அரபு அமீரக அணியின் நிகர ரன் விகிதத்தையும் (NRR) உயர்த்தியுள்ளது.
முன்னதாக ருவாண்டா அணிக்கு எதிரான போட்டியில், 7 ஓட்டங்கள் என்ற இலக்கை மாலி அணி 4 பந்துகளில் எட்டியது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
16 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan