இலங்கையில் அதிர்ச்சி - முதியோர் இல்லத்தில் தீ விபத்து - பலர் பலி
3 ஆனி 2026 புதன் 16:25 | பார்வைகள் : 140
ஹொரானா, படகொட – கல்பத்த பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் புதன்கிழமை (3) பிற்பகல் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் சிக்கியிருந்த 44 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த தீ விபத்தில் பலர் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், உயிரிழந்தவர்களின் சரியான எண்ணிக்கை தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை.
தீ விபத்தில் காயமடைந்த மேலும் 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எனினும், சம்பவத்தைத் தொடர்ந்து 11 பேரை இதுவரை கண்டறிய முடியாத நிலை காணப்படுவதாகவும், அவர்களைத் தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், மீட்பு மற்றும் தேடுதல் பணிகளும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan