Paristamil Navigation Paristamil advert login

கனடாவின் சுகாதாரத் துறை தொடர்பில் புதிய ஆய்வு தகவல்!

கனடாவின் சுகாதாரத் துறை தொடர்பில் புதிய ஆய்வு  தகவல்!

3 ஆனி 2026 புதன் 14:37 | பார்வைகள் : 311


கனடாவில் மருத்துவமனைக்குச் செல்வோர் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை மற்றும் போதிய பணியாளர்கள் இல்லாத பற்றாக்குறை ஆகியவை தொடர்ந்து நீடித்து வருகின்றன.

இதன் காரணமாக, நாட்டின் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பில் பரவலான மற்றும் அவசர மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று 90 சதவீதத்திற்கும் அதிகமான கனடியர்கள் விரும்புவதாகப் புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

'சாண்டிஸ் ஹெல்த்' என்ற ஆலோசனை நிறுவனத்திற்காக 'நானோஸ் ரிசர்ச்' நடத்திய புதிய கருத்துக்கணிப்பில் இந்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

91 சதவீதத்தினர் நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பில் கட்டாயம் மாற்றம் தேவை என்று கூறியுள்ளனர்.

55 சதவீதத்தினர் தற்போதைய மருத்துவக் கட்டமைப்பு சரியான பாதையில் செல்லவில்லை, மாறாக முற்றிலும் தவறான திசையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.

70 சதவீதத்தினர் தற்போதைய சுகாதார அமைப்பின் நிலையைக் கண்டு கவலையும் ஏமாற்றமும் அடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

வெறும் 14 சதவீதத்தினர் மட்டுமே சுகாதாரத் துறை சரியான பாதையில் செல்வதாக நம்புகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.

ஆய்வில் பங்கேற்றவர்களில் 81 சதவீதத்திற்கும் அதிகமானோர், சுகாதார சேவைகளை நவீனமயமாக்க வேண்டும் என்று ஆதரவு தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, 'வொர்ச்சுவல் கேர்' எனப்படும் இணையவழி மருத்துவ ஆலோசனை மற்றும் பிற டிஜிட்டல் கருவிகளின் பயன்பாட்டை விரிவுபடுத்த வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர் என ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.