எமானுவல் மக்ரோனின் புதிய அலுவலகத் தலைவர் யார்?
2 ஆனி 2026 செவ்வாய் 21:56 | பார்வைகள் : 531
52 வயதுடைய பிரெத்ரிக் ரோசே (Frédéric Rose), ஜூன் 6, 2026 முதல் எமானுவல் மக்ரோனின் அலுவலகத் தலைவராக பதவி ஏற்கிறார். அவர், தற்போதைய அதிகாரியான Georges‑François Leclerc இற்கு மாற்றீடாகப் பதவி ஏற்க உளளார்.
மூன்று தசாப்த அனுபவம் கொண்ட உயர்நிலை அதிகாரி!
பிறப்பு : Rennes
கல்வி : சட்டத்தில் சிறப்புத் தேர்ச்சி, பின்னர் நீதித்துறை
1998 : தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு செயல்மன்றத்தில் திட்ட மேலாளர்.
பின்னர் Vendée, Finistère, Midi‑Pyrénées மாவட்ட அரசு ஆணையங்களில் அலுவலகத் தலைவர்.
Élysée‑க்கு பழக்கமானவர்
2012–2013 : பரிஸ் காவல் துறை மாவட்ட அரசு ஆணையத்தின் அலுவலகத் தலைவர்
2019 : பயங்கரவாதம் மற்றும் குற்றத் தடுப்பு இடையமைச்சு குழுவின் பொதுச் செயலாளர்
2020 : மக்ரோனின் உள்துறை மற்றும் பாதுகாப்பு ஆலோசகர்
2024 : Yvelines மாவட்ட அரசு ஆணையர்
இந்த வாரம், அவர் மக்ரோனிடமிருந்து அதி உயர் கௌரவ விருதான Légion d’honneur பெற்றுள்ளார்
அவரின் பங்கு என்ன?
அலுவலகத் தலைவராக, பிரெத்ரிக் ரோசே:
ஜனாதிபதி மாளிகயான Élysée அலுவலகத்தின் முழு செயல்பாட்டையும் மேற்பார்வை செய்வார்.
ஜனாதிபதியின் தினசரி பணிகளை ஒருங்கிணைப்பார்.
அரசியல், பாதுகாப்பு மற்றும் நிர்வாகத் தீர்மானங்களில் முக்கிய பங்கு வகிப்பார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan