திமுக சின்னத்தில் போட்டியிட மதிமுகவுக்கு நிர்பந்தம்: வைகோ குற்றச்சாட்டு
3 ஆனி 2026 புதன் 12:56 | பார்வைகள் : 153
திமுக சின்னத்தில் போட்டியிட வேண்டும் என நிர்பந்தம் அளித்தனர். முஸ்லிம் லீக் தவிர எல்லா கட்சிகளுக்கும் எங்களை விட அதிக சீட் கொடுத்தனர்' என திமுக மீது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
திமுக கூட்டணியில் உறுதியாக நின்று அனைத்து தொகுதிகளிலும் தங்கள் உடல்பொருள் ஆவியை தந்து பணியாற்றினோம். 34 தொகுதிகளில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து ஒவ்வொரு இடத்திலும் ஒரும ணி நேரம் எனது உணர்ச்சிகளை கொட்டி ஆதரவாக நான் பிரசாரம் செய்தேன். 24 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது.
திமுக ஆதரவால்தான் அவர்களின் ஓட்டுகளால் தான் எங்களின் 2 எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றார்கள். 2 இடங்களில் வெற்றி வாய்ப்பை இழந்தனர்.எங்களின் பங்களிப்பும், எனது பங்களிப்பும் திமுக வெற்றிக்கும் ஒரு சிறிய காரணமாக இருந்திருக்கிறது.
ஆனால் மற்ற கட்சிக்கு எல்லாம் அதிக இடங்கள் கொடுக்கப்பட்டது. கட்சிகளின் பெயரை சொல்லி காயப்படுத்த விரும்பவில்லை. 10 இடம் ஒரு ராஜ்யசபா சீட்; ஒரு கட்சிக்கு 8 இடங்கள்; ஒரு கட்சிக்கு 27 இடம் பிளஸ் ராஜ்யசபா மற்ற இரண்டு கட்சிகளுக்கு ஐந்து ஐந்து இடங்கள். முஸ்லிம் லீக்கிற்கு 2 இடங்கள். எங்களுக்கு நான்கே இடங்கள்.
இது எங்கள் தோழர்கள் மனதில் ஆதங்கத்தை ஏற்படுத்தியது. தமிழகம் முழுவதும் இருக்கும் மதிமுக தொண்டர்கள் மனதில் தொகுதிகள் ஒதுக்கப்பட்ட விதம், அதிலும் அவர்கள் கட்சி சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்ற நிர்பந்தம். ஒரு தொகுதியில் நாங்கள் விரும்பும் சின்னத்தில் போட்டியிடலாம் என தெரிவித்து அதற்கான ஏற்பாடு செய்த நேரத்தில் கடைசி நேரத்தில் அங்கும் தனிச்சின்னத்தில் போட்டியிடக்கூடாது உதயசூரியன் தான் போட்டியிட வேண்டும் என்ற நிர்பந்த்ததால் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டியதாகிவிட்டது. எங்கள் கட்சி சின்னத்தில் நின்றிருந்தால்...
திமுக ஆதரவோடு ஓட்டு பெற்று வெற்றி காங்கிரஸ், நன்றி சொல்லாமல் தவெகவுக்கு ஆதரவு கொடுத்து அமைச்சரவையில் இடம்பெற்றது. அதேபோன்று தேமுதிக 10 இடம் ஒரு ராஜ்யசபா பெற்று ஒரு இடத்தில் வெற்றி பெற்றனர். அவர்கள் சின்னத்தில் போட்டியிட்டனர். மார்க்சிஸ்ட்டும், இந்திய கம்யூனிஸ்ட்டும் தனிச்சின்னத்தில் போட்டியிட்டு 2 இடங்களில் வென்றனர்.
அதை நான் பெரிதாக சொல்லியதில்லை. நீங்கள் கேட்டதால் அதை சொன்னேன். எதுவாயினும் தொண்டர்கள் மனதில் இருக்கும் உணர்வுகள், நிர்வாகிகள் நினைப்பது எல்லாம், மதிமுக பொதுக்குழுவில் கருத்துகள் பரிமாறப்படும். இவ்வாறு அவர் கூறினார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan