மம்தாவுக்கு எதிராக 50 எம்எல்ஏக்கள் போர்க்கொடி
3 ஆனி 2026 புதன் 10:47 | பார்வைகள் : 302
நாங்களே உண்மையான திரிணமுல் காங்கிரஸ். எங்களிடம் 50 எம்எல்ஏக்க்ள் உள்ளனர் என்று கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட ரிஜூ தத்தா கூறி உள்ளார்.
மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தலில் பாஜ அமோக வெற்றி பெற்றது. மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் குறைந்த தொகுதிகளிலே வென்றது. சுவேந்து அதிகாரி முதல்வராக பொறுப்பேற்றார்.
தேர்தல் தோல்வியை தொடர்ந்து திரிணமுல் காங்கிரசில் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது. கட்சியின் அதிகாரப்பூர்வ ஆலோசனை கூட்டத்தில் 60 எம்எல்ஏக்கள் கலந்து கொள்ளாதது மம்தா பானர்ஜியை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
மேற்கு வங்க சட்டசபை எதிர்க்கட்சி தலைவரை பரிந்துரைத்து எழுதப்பட்ட கடிதத்தில் சில எம்எல்ஏக்கள் கையெழுத்து போலி என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக கட்சியில் இருந்து சந்திபன் சாஹா, ரிதாப்ரதா பந்தோபாத்யாயா ஆகியோரை மம்தா நீக்கினார்.
இந்நிலையில் தங்களிடம் தான் அதிக ஆதரவு எம்எல்ஏக்கள் உள்ளனர், நாங்கன் தான் உண்மையான திரிணமுல் காங்கிரஸ் என அக்கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்எல்ஏ ரிஜீ தத்தா கூறி உள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது; சுமார் 50 எம்எல்ஏக்கள் ஒன்றுபட்டு மூன்றில் இரண்டு மடங்கு பெரும்பான்மையை உருவாக்கி உள்ளோம். நாங்கள் தான் பெரும்பான்மையுடன் இருக்கிறோம். நாங்களே உண்மையான திரிணமுல் காங்கிரஸ்.
எனவே எதிர்க்கட்சித் தலைவர் ரிதாப்ரதா பந்தோபாத்யாயா தான்.சோபன்தேப் சட்டோபாத்யாயா அல்ல. பெரும்பான்மை உறுப்பினர்கள் உள்ளதால் கட்சியின் சின்னத்தையும் நாங்களே தக்க வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan