Paristamil Navigation Paristamil advert login

எதிரி ரேடார் அழிப்பு ஏவுகணை அழிக்கும் ருத்ரா M-II சோதனை வெற்றி

எதிரி ரேடார் அழிப்பு ஏவுகணை அழிக்கும் ருத்ரா M-II சோதனை வெற்றி

3 ஆனி 2026 புதன் 09:08 | பார்வைகள் : 380


உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'ருத்ரா M-II' எதிரி ரேடார் அழிப்பு ஏவுகணையை, சுகோய் Su-30 எம்கேஐ போர் விமானம் மூலம் ஏவி டிஆர்டிஓ வெற்றிகரமாக சோதனை செய்தது.

நிலப்பரப்பு மற்றும் கடற்பரப்பில் உள்ள எதிரிகளின் ரேடார்கள் உள்ளிட்ட தளவாடப் பொருட்களை  300 கி.மீ. வரையிலான தொலைதூரத்திலிருந்து, துல்லியமாக அழிக்கும் திறன் பெற்ற உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'ருத்ரா M-II' ஏவுகணை  வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. இந்த சோதனை ஒடிசாவின் சந்திப்பூரில் உள்ள ஏவுகணை சோதனை தளத்தில் சுகோய் Su-30 எம்கேஐ போர் விமானம் மூலம் ஏவி நடத்தப்பட்டு உள்ளது.

இது, இந்தியாவின் துல்லியமான தாக்குதல் திறன்களை வலுப்படுத்துவதற்கும், பாதுகாப்புத் தொழில்நுட்பத்தில் தற்சார்பை மேம்படுத்துவதற்குமான முயற்சிகளில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்துள்ளது. ஏவுகணை சோதனைக்கு வாழ்த்து தெரிவித்த நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், இதில் பணி புரிந்த டி.ஆர்.டி.ஓ.,குழுவினர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.