Paristamil Navigation Paristamil advert login

ஐபிஎல் தொடரில் இமாலய சாதனை படைத்த ஜோஸ் பட்லர்

ஐபிஎல் தொடரில் இமாலய சாதனை படைத்த ஜோஸ் பட்லர்

2 ஆனி 2026 செவ்வாய் 15:20 | பார்வைகள் : 183


ஐபிஎல் தொடரில் அதிக கேட்சுகள் பிடித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை ஜோஸ் பட்லர் படைத்தார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இரண்டாவது முறையாக ஐபிஎல் கிண்ணத்தைக் கைப்பற்றியது.

இந்தத் தொடரில் ஜித்தேஷ் ஷர்மாவின் அபார சாதனையை, குஜராத் டைட்டன்ஸ் அணியின் விக்கெட் கீப்பரான ஜோஸ் பட்லர் (Jos Buttler) முறியடித்தார்.

ஐபிஎல்லில் 19 கேட்சுகள் பிடித்ததன் மூலம், அதிக கேட்சுகள் பிடித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை 2025ஆம் ஆனது ஜிதேஷ் ஷர்மா படைத்தார்.

அவரது சாதனையை முறியடித்த ஜோஸ் பட்லர், 2026 சீஸனில் மொத்தம் 25 கேட்சுகளைப் பிடித்துள்ளார்.

அதிக கேட்சுகள் பிடித்த விக்கேட் கீப்பர்கள்:

ஜோஸ் பட்லர் - 25 கேட்சுகள்
ஜித்தேஷ் ஷர்மா - 19 கேட்சுகள்
நமன் ஓஜா - 18 கேட்சுகள்
ரிஷாப் பண்ட் - 18 கேட்சுகள்
குயின்டன் டி காக் - 18 கேட்சுகள்
துருவ் ஜுரேல் - 18 கேட்சுகள்