Paristamil Navigation Paristamil advert login

நாட்டை அவமதிக்கும் ராகுல், கபில் சிபல்; பாஜ கண்டனம்

நாட்டை அவமதிக்கும் ராகுல், கபில் சிபல்; பாஜ கண்டனம்

2 ஆனி 2026 செவ்வாய் 10:46 | பார்வைகள் : 121


நாட்டில் வாழ்வதற்கு வெட்கமாக இருக்கிறது என, கருத்து தெரிவித்த மூத்த வழக்கறிஞரும், ராஜ்யசபா சுயேச்சை எம்.பி.,யுமான கபில் சிபலுக்கு, பா.ஜ., கண்டனம் தெரிவித்துள்ளது.

முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கும் மேற்கு வங்கத்தில், எதிர்க்கட்சியான திரிணமுல் காங்கிரசை சேர்ந்த லோக்சபா எம்.பி., அபிஷேக் பானர்ஜி மீது, சமீபத்தில் தாக்குதல் நடந்தது.

இது குறித்து கருத்து தெரிவித்த மூத்த வழக்கறிஞர் கபில் சிபல்,

மக்களாட்சியின் அடித்தளத்தை அழிக்க ஆளுங்கட்சி எந்த எல்லைக்கும் செல்கிறது. இந்த நாட்டில் வாழ்வதற்கே வெட்கக்கேடாக இருக்கிறது, என்றார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து, பா.ஜ., தேசிய செய்தித் தொடர்பாளர் செஷாத் பூனாவாலா கூறியதாவது:

இந்த நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி, கோடிக்கணக்கான ரூபாயை சம்பளமாக கபில் சிபல் வாங்குகிறார்.

அப்போது, இங்கு வாழ்வதற்கு அவருக்கு வெட்கமாக தெரியவில்லையா? 2021-ல், மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறையின் போது, 300-க்கும் மேற்பட்ட பா.ஜ., - காங்., தொண்டர்கள் கொல்லப்பட்டனர்.

அப்போது, கபில் சிபல் வாய் திறக்காதது ஏன்? ஆர்.ஜி.கர், சந்தேஷ்காலி போன்ற சம்பவங்களிலும் அ வர் மவுனமாக இருந்தது ஏன்?

அரசு மீது அரசியல் கருத்து வேறுபாடுகள் இருப்பது இயல்பானது தான். ஆனால், பா.ஜ.,வை எதி ர்க்கிறோம் என்ற பெயரில் நாட்டை அவமதிக்கும் போக்கு ராகுல், கபில் சிபல் போன்றோரிடம் காணப்படுகிறது.

பா.ஜ.,வை எதிர்க்கலாம்; ஆனால் நாட்டை ஏன் எதிர்க்கிறீர்கள்?

அரசை எதிர்த்து போராடுவேன். வெளிநாட்டு சக்திகள் இதில் தலையிட வேண்டும் என, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கொக்கரிக்கிறார்.

அந்த வரிசையில் தற்போது கபில் சிபலும் இணைந்துள்ளார். இது போன்ற கருத்துகள் தேசத்தின் மீதான வெறுப்பையே காட்டுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.